சென்செள 9 விண்கலம் அனைத்து கடமைகளையும் வெற்றிகரமாக முடித்து விட்டு, பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பிய பின், அது பற்றி, பல வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள்,உடனே தகவல் வெளியிட்டதோடு, இவ்விண்பயணத்துக்குக் கிடைத்த சாதனைகளையும், முக்கியத்துவத்தையும் ஆக்கப்பூர்வமாகப் பாராட்டின.
சீனாவின் சென்செள 9 விண்கலம் தடையின்றி பூமிக்குத் திரும்பி, பல முன்னேற்றங்கள், பேராசையுடைய கடமைகள் ஆகியவற்றை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றுக்கு அடுத்து படியாக, மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலத்தை விண்வெளியில் இணைப்பதைச் சுதந்திரமாக நிறைவேற்றும் நாடாக, சீனா மாறியுள்ளது என்று சி என் என் என்னும் அமெரிக்கச் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. 1 2