அன்று முற்பகல் 11 மணியளவில் பெய்ஜிங்கின் சான்லிதூன் பகுதியிலுள்ள இந்தியன் கிச்சன் உணவகத்தில் இந்த பொங்கல் விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடி இந்த விழா தொடங்கியது. அனைவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கல் வைத்தனர். பொங்கல் பானை பொங்கி வழிந்தபோது பொங்கலோ, பொங்கல் என்று அனைவரும் குரலெழுப்பி மகிழ்ந்தனர்.