இந்த விழா ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான திரு. லட்சுமணன் முருசேகன் அனைவரையும் வரவேற்றதோடு, பழையன களைதல் புதியன புகுதலை வலியுறுத்தும் போகிப் பொங்கல், நல்ல அறுவடைக்கு உதவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல், உழவுக்கு உதவும் கால்நடைகளை போற்றும் மாட்டுப் பொங்கல், உறவினர் மற்றும் நண்பரோடு என்றும் தொடர்பில் இருப்பதை வலியுறுத்தும் காணும் பொங்கல் ஆகியவற்றை விளக்கி கூறி அனைவரையும் வரவேற்றார்.
தலைவர் கலைமகள், அவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, தமிழர்களின் பாரம்பரிய விழாவில் கலந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக உரையாற்றுகையில் குறிப்பிட்டார். கலையரசி அவர்கள் தமிழ் நாட்டின் தஞ்சாவூரில் தமிழ்க் கல்விக் பயின்றபோது, கிராமத்தில் பொங்கல் கொண்டாடியதை நினைவுகூர்ந்து பேசி, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இவ்விழாவில் கலந்து கொள்வதில் கலைமணி மகிழ்ச்சித் தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனம் ஒன்றில் ஆசிய-பசிபிக் பகுதி இயக்குனராக பணியாற்றும் பொறியிலாளர் சி.பி.மோகன் சிறந்த பாடகராக திரையிசைப் பாடல்கள் பாடி மகிழ்வித்தார். விருந்தினர் சார்பாக திரு.விஸ்வநாத் அவர்கள் விருந்தினர் சார்பாக உரையாற்றினார்.
அடுத்து நடைபெற்ற கலந்துரையாடலில், பெய்ஜிங் தமிழ் சங்கமம் என்ற பெயரில் இணைந்திருந்து, பெய்ஜிங் வாழ் தமிழர்கள் ஓராண்டில் மூன்று அல்லது நான்கு முறை ஒன்றாக கூடி மகிழ விருப்பம் தெரிவித்தனர். அதற்காக பொறுப்பாளர்கள் சிலர் இருந்து, ஒருங்கிணைப்புப் பணித் தொடர வேண்டுமென விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
பின்னர், கலைந்துரையாடல் நடத்தியவரும், விழா ஒருங்கிணைப்பாளரில் ஒருவருமான திரு.மைக்கிள் அனைவருக்கும் நன்றித் தெரிவித்தார். வர்தகர் திரு. ஜோசப் வைஜெயந்த் அவர்களும் இதை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றினார்.
இறுதியில், அனைவரும் பொங்கல் சிறப்பு விருந்துண்டு, உரையாடி மகிழ்ந்தனர்.