நாடு முழுவதிலும் உள்ள பேருந்து நிலையங்கள் இன்று மொத்தம் 8 இலட்சத்து 60 ஆயிரம் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளன என்று போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே ஜியன்சோங் கூறினார். இன்று மட்டும் சுமார் 8 கோடியே 80 இலட்சம் தொலைதூரப் பயணிகள் பேருந்து மூலம் பயணம் மேற்கொள்வர் என்று அவர் மதிப்பிட்டார். இது வரலாற்றில் புதிய உயர் பதிவாகும்.