• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேயர்களின் கருத்துக்கள்
  2009-11-24 16:43:27  cri எழுத்தின் அளவு:  A A A   

கலை இலங்கை வட்டவளை எம்.வீ.எஸ். யோகராஜா எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகளை பல நாட்களாக கேட்டு வருகிறேன். இந்நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் தமிழ்மொழி சொற்கள் நன்றாக உள்ளன. பிற ஊடகங்களை விட சிறந்த தமிழ் மொழிநடை இதில் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தூய தமிழில் இனிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கிவரும் சீன வானொலிக்கு பாராட்டுக்கள்
மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீன அரசுத் தலைவர் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும் அரசு முறைப் பயணம் பற்றிய தகவல்களை செய்திகளில் கேட்டேன். கடந்த 15 ஆண்டுகளில் சீன அரசுத் தலைவர்களில் ஒருவர் இந்த நாடுகளில் மேற்கொள்ளும் முதல் பயணம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையில் சீன வம்சாவழியினர் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்கள் அனைவரும் சீன அரசுத் தலைவரின் பயணத்தை வழிமேல் விழி வைத்து காத்திருப்பர் என்றே நான் நினைக்கின்றேன். சீன அரசுத் தலைவரின் இப்பயணம் மாபெரும் வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள்.


மதுரை அண்ணாநகர் அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்
சீன விடுதலைப்படையின் விமானப்படை நிறுவப்பட்ட வைரவிழா பற்றிய செய்திவிளக்கம் கேட்டேன். இதையொட்டி பெய்ஜிங்கில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட 30 நாடுகளின் தலைவர்களுடன் சீனா அரசுத்தலைவர் கலந்துரையாடியதை அறிந்தேன். விமானப்படை மனித குல பாதுகாப்பை வளர்ச்சியடைச் செய்த படையாததால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அண்டவெளியை அமைதிக்கு பயன்படுத்தும் சீன எதிர்கால திட்டத்தை அவர் விளக்கியது ஆக்கப்பூர்வமானது.


நாகர்கோயில் ஸ்டெல்லா சர்மிளா அனுப்பிய மின்னஞ்சல்
அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமாவின் சீனப் பயணம் பற்றி சீன வானொலி ஒளிபரப்பிய செய்தி மிக அருமை. நவம்பர் 15-முதல் 18-வரை மேற்கொள்ளப்படும் ஒபாமாவின் இப்பயணம் சீன -அமெரிக்க நட்பை மேலும் அதிகரிக்க செய்யும். சீனாவின் வளர்ச்சியை காணும் வாய்ப்பாகவும் ஒபாமாவுக்கு இப்பயணம் அமையும்.
வளவனூர் முத்துசிவக்குமரன் அனுப்பிய மின்னஞ்சல்
அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் இணைய தள முகவரி சீன மொழியில் அறிமுகமாக இருப்பதையும், இணைய பயன்பாடு ஆங்கிலம் அல்லாத மொழிகளிலும் உருவாகயுள்ளதையும் அறிந்தேன். இணையதளங்களை சீனர்கள் இனி, தாய்மொழியிலேயே தேடலாம். இந்திய மொழிகளிலும் இது போன்ற அனுமதி கிடைத்தால், ஆங்கில மொழி அறியாதவர்களும் இணையத் தளங்களை பயன்படுத்துவர். அன்றைய பகுதியில் விந்தணு சோதனையை வீட்டிலேயே செய்து கொள்ளும் வசதி கிடைத்திருக்கிறது கூச்சப்பட்டு மருத்துவ ஆலோசனை கேட்காமல் இருக்கும் சிலருக்கு நல்ல வரப்பிரசாதமாக இருக்கும்.


உத்திரக்குடி சு.கலைவாணன் ராதிகா அனுப்பிய மின்னஞ்சல்
சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியை செவிமடுத்தேன். ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு கூட தெரியாத புதுமை செயல்கள் ஐந்தறிவு படைத்த பறவைகளுக்கு இருப்பது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது. ஆகையால் தான் இன்றைக்கும் நாயை நன்றியுள்ள விலங்காகவும், வீட்டில் பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ் ஆகியவைகளை வளர்த்து வருகின்றோம். இந்நிகழ்ச்சியில் பறவைகள் மனித குலத்தின் நண்பர்கள் என்றது புதிய சிந்தனை. மனிதர்களுக்கு உதவுவது மனித நேயமாக இருப்பதுபோல பறவைகளுக்கு முதலுதவி செய்வதும் மனித நேயமே என்பதை ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகளுக்கு சிகிச்சை அளித்திருக்கும் தகவல் உணர்த்தியது. இயற்கை புகலிடம் என்பதை விட மனித நேய மகிழ்விடம் என்பதே பொருந்தும்.


ஊட்டி எஸ்.கே.சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
பெய்சிங் மாநகரின் தேசிய ஒலிம்பிக் பூங்காவில் அமைந்துள்ள சீன அறிவியல் தொழில் நுட்பக் காட்சியகம் பற்றி நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் கேட்டேன். அண்மையில் தான் அது பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. 48 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த புதிய பூங்கவை தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு பெரிய கன சதுரம் போல் அமைந்துள்ளது போன்ற விரிவான தகவல்களுடன் அமைந்திருந்த இந்நிகழ்ச்சி அருமை.


சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
ஐ.நா.வின் அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றாக இருக்கின்ற சீன மொழியினை கற்றுக்கொள்ள உலகெங்கும் பரந்து விரிந்து வாழும் மக்களில் பெரும்பான்மையோர் ஆசைப்படுகிறார்கள். அந்த எண்ணத்தை ஈடேற்றும் வகையில் உலகில் சுமார் 87 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 280 கன்பீயூசியஸ் கழக வகுப்புகள் மூலம் சீன மொழியினை கற்றுத்தரும் சீன அரசின் சேவை உலக மக்களுக்கு கிடைத்திட்ட பெரும்பேறாகும். மேலும் இவ்வாண்டு சுமார் 1021 வெளி நாட்டவருக்கு சீன மொழி ஆசிரியருக்கான புலமை பரிசினை சீன கன்பீயூசியஸ் கழகம் வழங்கியிருப்பது சீன மொழியை கற்பிக்கும் வெளிநாட்டு ஆசிரியர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும்.


1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040