Israel Epstein சீன மக்கள் மிகவும் அறிந்து கொண்ட புகழ் பெற்ற செய்தியாளராரார். கடந்த 100 ஆண்டுகளில் சீனாவுக்கு மிகவும் உதவி வழங்கிய சீன மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட பத்து சர்வதேச நண்பர்களில் ஒருவராக Israel Epsteinனை சீன இணையதள பயன்பட்டாளர்கள் தெரிவு செய்துள்ளனர். அவருடைய துணைவியார் குவான் வென் ப்பி அம்மையார் சீன வானொலி நிலையத்துக்கு வந்து வழங்கிய சிறப்பு நேர்காணலில் Israel Epsteinயின் வாழ்க்கையை விவரித்தார்.
Israel Epstein 1915ம் ஆண்டு போலாந்தின் வார்ஸா நகரில் மார்க்சிச நம்பிக்கை கொண்ட யூதர் குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவரது பெற்றோர் புரட்சிப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு தெருவோர வாழ்க்கை வாழ வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். இரண்டு வயதில் அவர் பெற்றோருடன் ஜப்பான் வழியாக சீனா வந்தடைந்தார். குவான் வென் ப்பி அம்மையார் மீளாய்வு செய்து கூறியதாவது.
சிறு வயது முதலே அவர் சீனாவில் வாழ்ந்தார். குடியுரிமை பெறாத அவர் சர்வதேசியவாதியாக முதலில் இருந்தார். பின்னரே நாட்டுபற்றுணர்வை பெற்றார். பின்னர் அவர் சீன குடியுரிமையை பெற்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவருடைய வாழ்க்கை முழுவதும் சீனாவுக்கு அர்பணிக்கப்பட்டது. இது அவருடைய பெருமை என்று குவான் வென் ப்பி அம்மையார் கூறினார்.