• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வளர்ச்சியை கண்ட செய்தியாளர் Esptein
  2010-01-08 15:02:06  cri எழுத்தின் அளவு:  A A A   

அவர் வடக்குச் சீனாவின் ஹார்ப்பின், டியெச்சின் மாநகரங்களில் கல்வி கற்று வளர்ந்தார். பின்னர் போர் தளச் செய்தியாளராக பணியாற்றி சீனப் படையினர் ஜப்பானை எதிர்த்து போராடிய செய்திகளை அறிவித்தார்.

விடுதலைப் பிரதேசத்தில் கண்ட நிலைமையை உலகத்திற்கு விரைவாக அறிவிக்கும் வகையில் அவர் கோமின்தான் கட்சியிடமிருந்து வருகின்ற தொல்லைகளிலிருந்து விடுப்பட அமெரிக்காவுக்குச் சென்று கட்டுரைகளை எழுதினார். அமெரிக்காவில் தங்கியிருந்த போது அவர் தனது துணைவியாருடன் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஊர்வலங்களில் கலந்து கொண்டார். இவ்வாறு சீனாவில் அமெரிக்காவின் தலையீட்டை அவர் எதிர்த்தார். மஞ்சல் ஆற்றின் குழுப் பாடலை மொழியாக்கி பல முறை பாடினார்.

1951ம் ஆண்டு காலஞ்சென்ற தலைமை அமைச்சர் சோஅன்லாய், சுன்ச்சின்லிங் ஆகியோரின் அழைப்பை ஏற்று Israel Epstein மீண்டும் பெய்ஜிங்கு திரும்பினார். முன்பு "சீனக் கட்டுமானம்" என்றிருந்து இப்போது "மக்கள் சீனம்" என பெயர் மாற்றப்பட்டுள்ள இதழின் தலைமைப் பதிப்பாசிரியராக அவர் பணிபுரிந்தார். இந்த இதழ் பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

பணியில் நம்பகமான கூட்டாளியாகிய Israel Epstein தம்பதியரால் மறக்க முடியாத நிகழ்வை குவான் வென் ப்பி அம்மையார் கூறினார்.

"நான் கண்ட சீனா" என்னும் மீளாய்வுக் குறிப்பில் ஒரு கதை பதிவுசெய்யப்படுகின்றது. அதாவது 1944ம் ஆண்டு யேன் ஆன் பிரதேசத்தில் செய்தியறிப்பு விடயமாகும். அப்போது யேன் ஆன் கோமின்தான் கட்சிப்படையால் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கிலிருந்து செய்திகள் வெளியேற்றம் தடுக்கப்பட்டன. அவர் அத்தடையை முறியடித்து வெளிநாட்டுச் செய்தியாளர்களை அணிதிரட்டி யேன் ஆனுக்குச் சென்றார். இந்நிகழ்வை பார்த்து தான் கோமின்தான் கட்சி கட்சியினர் பலரை வெளிநாட்டுச் செய்தியாளர் குழுவில் சேர்த்தது. இந்த வெளிநாட்டுச் செய்தியாளர் குழு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர் குழுவாக மாறியது. யேன் ஆன் சென்றடைந்த பின் அங்கே துணிவுடன் ஜப்பான் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடிய மக்கள் அனைவரும் Israel Epstein மீளாய்வு குறிப்பில் நாயகர்களாக சேர்க்கப்பட்டனர். புதிய சீனா யேன் ஆனில் தான் உருவாகும் என்ற நம்பிக்கை Israel Epsteinஇன் மனத்தில் அப்போதே பதிந்து விட்டது. யேன் ஆனில் வளர்ந்த பயிர்கள், வாழ்ந்த முதியோர் மற்றும் குழந்தைகளின் இன்பமான சிரித்த முகங்கள் அவரது மீளாய்வுக் குறிப்பில் பதிவுகளாயின என்று குவான் வென் ப்பின் அம்மையார் வருணித்தார்.

கடுமையான போர் வாழ்க்கை தாக்குப்பிடித்த Israel Epstein சீன மக்களுடன் சேர்ந்து அமைதியான காலத்தை வரவேற்றார். அவருடைய 90 ஆண்டுகால வாழ்க்கையில் 82 ஆண்டுகள் சீனாவில் கழிந்தன. சீனாவில் ஏற்பட்ட தலைக்கீழான மாற்றங்களை அவரே கண்டு உறுதிப்படுத்தினார். இந்த வாழ்க்கை அனுப்பவம் கிடைத்ததற்காக அவர் பெருமையடைந்தார். வரலாறு எனக்கென நிறுத்திய காலத்தில் நான் சீன மக்களின் புரட்சி இலட்சியத்தில் பங்கெடுத்தேன். இது அனைத்தையும் விட மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று Israel Epstein வாழ்ந்த போது பெருமையுடன் மதிப்பிட்டார்.

சீனாவின் நவீனமயமாக்க கட்டுமானத்தில் Israel Epstein மிகவும் கவனம் செலுத்தினார். இது பற்றி குவான் வென் ப்பி அம்மையார் கூறியதாவது.

சீனாவின் கட்டுமானத்தில் அவர் மிகவும் கவனம் செலுத்தினார். ஹாங்காங் சீனாவுக்கு திரும்பியதிலும் அவர் மிகவும் கவனம் செலுத்தினார். ஹாங்காங் சீனாவுக்கு திரும்பும் விழாவை தொலைக் காட்சி மூலம் முழுமையாக கண்டு ரசித்தார். சீனப் பெருநிலப்பகுதியும் தைவானும் கூடியவிரைவில் ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் மிகவும் எதிர்பார்த்தார். தவிர, சீன திபெத் அவரது கனவாகும். திபெத்தில் மாற்றம் என்ற நூலையும் அவர் எழுதினார். அவரது வாழ்க்கையில் நான்கு முறை திபெத்துக்குச் சென்று திரும்பினார். தொடர் வண்டி மூலம் திபெத்துக்குச் செல்லவில்லையே என்பது அவருக்கு மிகவும் வருத்தம் என்று குவான் வென் ப்பி அம்மையார் கூறினார்.

திரு Israel Epstein 2005ம் ஆண்டு சீனாவில் மரணமடைந்தார். சீன மக்களின் நட்பார்ந்த தூதராகிய அவர் அவரது வாழ்க்கை முழுவதையும் உலகத்திற்கு சீனா பற்றி செய்தியறிவிப்பதில் செலவழித்தார். சீன சமூகத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்திய Israel Epstein சீன மக்களின் ஆழந்த நன்றியுடன் அவர்களது நினைவில் வாழ்ந்து வருகிறார்.

நேயர்கள் இதுவரை சீன வளர்ச்சியை கண்டு உறுதிப்படுத்திய புகழ் பெற்ற செய்தியாளர் Israel Epstein பற்றி கேட்டீர்கள். இத்துடன் நட்புப் பாலம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.


1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040