• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விவசாயிகளுக்கு நன்மை கொண்டு வந்தவர்
  2010-01-26 10:23:01  cri எழுத்தின் அளவு:  A A A   







விவசாயிகளுக்கு தேவையான நன்மைகளை சீனாவில் பரப்புரை செய்ய முயற்சி மேற்கொண்ட ஜப்பானை சேர்ந்த Hiramatsu morihiko பற்றி கூறுகின்றோம்.
Hiramatsu morihiko என்பவரை குறிப்பிட்டால் நகரங்களில் வாழ்கின்ற சீன மக்கள் அவரை அறிந்திருப்பது குறைவு. ஆனால் சீனாவின் சியாங் சூ, சியாங் சீ, கேன்சூ, ஹோபேய், ஷாங்காய் முதலிய இடங்களின் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்கள் அவரை மிகவும் அறிந்துள்ளனர். அவர் பரப்புரை செய்த "ஒரு கிராமத்துக்கு ஓர் உற்பத்தி பொருட்சின்னம்"என்ற நடவடிக்கை அங்கே வாழ்கின்ற மிகப் பல விவசாயிகள் சொந்த மூல வளங்களை பயன்படுத்தி வறுமையிலிருந்து விடுப்பட்டு இன்பமான வசதி கொண்ட வாழ்க்கையை வாழ்வதற்கு துணை புரிந்துள்ளது. சீன மக்கள் மீது ஆழ்ந்த அன்புணர்வு கொண்ட முதியவரான Hiramatsu morihiko விவசாயிகளுக்கு சிறந்த முறையில் உதவி வழங்கியுள்ளார். 2002ம் ஆண்டு சீன அரசு வழங்கிய நட்பு விருதை பெற்ற அவர் சீனத் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். ஜப்பானில் செய்தி அறிவிக்கின்ற சீன வானொலி செய்தியாளர் யே ஹுன் யூ முதியவர் Hiramatsu morihiko வாழ்கின்ற ஊருக்குச் சென்று அவரிடமிருந்து நேர்காணல் பெறும் சிறப்பு வாய்ப்பை பெற்றார்.


1979ம் ஆண்டு ஊரிலுள்ள உற்றார் உறவினரின் அழைப்பை ஏற்ற Hiramatsu morihiko பொருளாதார அமைச்சகத்திலுள்ள தனது பதவியை கைவிட்டு விட்டு பிறந்த ஊரான Oitaவுக்குத் திரும்பினார். அத்துடன் தேர்தலில் போட்டியிட்டு Oita மாவட்டத் தலைவரானார். அவர் 6 முறை இப்பபதவியில் இருந்தபடி மக்களுக்கு சேவை புரிந்தார். 80 வயதாகிய போது அவர் மாவட்ட தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் பணி புரிந்த போது "ஒரு கிராமத்துக்கு ஓர் உற்பத்தி பொருட்சின்னம்"என்ற நடவடிக்கையை பரப்புரை செய்ய பாடுபட்டார். பிரதேசப் பொருளாதாரத்தை வளர்ப்பது இந்த புதிய வேளாண் வளர்ச்சி மாதிரியின் இலக்காகும். இந்நடவடிக்கையின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் அதற்கு ஏற்ற தனிச்சிறப்பியல்பு மிக்க வேளான் உற்பத்திப் பொருளை வளர்த்து சந்தைப்படுத்துவது ஊக்கப்படுத்தப்படுகின்றது. இதன் விளைவாக வேளாண் பொருளாதாரத்தின் பல தன்மைகளும் உள்ளார்ந்த வளர்ச்சியும் நனவாக்கப்பட்டுள்ளன. இது பற்றி முதியவர் Hiramatsu morihiko மனநிறைவுடன் கூறியதாவது.
முன்பு இங்குள்ள கிராமப்புறங்கள் மிகவும் வறுமையானவை. வேளாண்மையில் ஈடுபடும் உற்சாகம் மக்களுக்கு இல்லை. பலர் நகரங்களில் சம்பாதித்து வாழ்ந்தனர். இந்த நிலைமையை கண்டு மதிப்பு கொண்ட வேளாண் உற்பத்தி பொருட்களை அதிகமாக விளைவித்தால் மக்களின் வருமானம் உயரும் என்றும் டோக்கியூ போன்ற நகரங்களுக்கு செல்லாமல் கிராமப்புறங்களில் இன்பமான வாழ்க்கை வாழலாம் என்றும் தாம் நினைத்ததை அவர் விவரித்தார்
"ஒரு கிராமத்துக்கு ஓர் உற்பத்தி பொருட்சின்னம்"என்ற நடவடிக்கை வேளாண் உற்பத்தியை வளர்ப்பது அல்ல. கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி திசையையும் வேளான் வளர்ச்சித் தரத்தையும் உயர்த்துவதற்கு ஆழமான பாதிப்பு வழங்கிய முயற்சியாகும். உள்ளூர் மக்கள் வேளாண் அறிவியல் தொழில் நுட்பத்தை புத்தாக்கி அங்கே வளரும் பயிர் வகைகளை ஒருங்கிணைத்து, தமக்கு ஏற்ற வேளாண் துறையை தாங்களே தீர்மானிப்பது, திறமைசாலிகளை வளர்ப்பது ஆகியவை இந்த நடவடிக்கையின் அம்சங்களில் அடக்கம்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040