சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
நிலநடுக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஹெய்டிக்கு சீன அரசு சுமார் 4கோடியே 80லட்சம் யுவான் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திருப்பதை அறிந்தேன். ஒரு நாடு பேரிடர்களில் சிக்கித்தவிக்கும் வேளைகளில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அந்நாட்டிற்கு உதவிகள் புரிவது மனிதாபிமான நடவடிக்கையாகும். சீன நடுவணரசின் இவ்வுதவி ஹெய்தி மக்களால் காலத்தாலும் மறக்கமுடியாத பேருதவியாக அமையும். சீன மக்களுக்கு என்றென்றும் ஹெய்தி மக்கள் கடமைப்பட்டிருப்பர்.
மதுரை அண்ணாநகர் ஆர்.அமுதாராணி
ஹைய்டியில் சீன மீட்புதவிக் குழுக்கள் மேற்கொண்ட மீட்புபணிகளை சீனாவில் உள்ள ஜநா ஒருகிணைப்பு பிரதிநிதி வெகுவாக பாரட்டியுள்ளார். அதன் நடவடிக்கைகள் விரைவானது, உயர்ந்த பயன்களை தந்துள்ளது என தெரிவித்திருக்கிறார். இது சீனாவின் மனிதாபிமான மனப்பான்மைக்கு கிடைத்த பாராட்டாகும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும், சீன அரசவையும் நடத்திய 5வது திபெத் பணிக்கூட்டத்தில் ஹீச்சிந்தாவ் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டது திபெத்திற்கு சீன அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.
பெரியகாலாப்பட்டு பெ.சந்திரசேகரன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கின் அழகையும், சிறப்பையும் இந்த உலகமே அறியும். ஆனால் பெய்ஜிங் மாநகரத்தின் தோற்றம், வளர்ச்சி, சமூகம், மத வரலாறு, மக்கள் வாழ்க்கை, ஜப்பான் ஆக்கிரமிப்பு என அனைத்து தகவல்களையும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி மூலமாக நேயர்கள் தற்போது முழுமையாக அறிந்து கொண்டு இருப்பார்கள் என எண்ணுகிறேன். சீனப்பாடல் பின்னனியில் இசைக்கப்பட பெய்ஜிங்கின் பெருமையை எங்கள் மனதில் பதிய செய்த திருமதி கலையரசி அவர்களுக்கு நன்றி.
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீன வானொலி தமிழ் இணையத்தில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கென தனிப் பக்கத்தினை துவங்கியிருப்பதை வரவேற்கின்றேன். பொருட்காட்சி துவங்க இன்னும் 100 நாட்களுக்கு குறைவாக இருக்கும் நிலையில், இப்பக்கத்தின் வாயிலாக ஏராளமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என நம்புகின்றேன். குறிப்பாக, தற்போது 9 நாடுகள் உருவாக்கியுள்ள அரங்குகளின் நிழற்படங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. 170க்கும் அதிகமான நாடுகளின் அரங்குகளை ஒட்டுமொத்தமாக காணும் எவரும், கற்பனையாக விவரிக்கப்படும் சொர்க்கத்தை நேரில் கண்டதாக நிச்சயம் எண்ணக்கூடும். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து, உலகின் கவனத்தை ஒட்டுமொத்தமாக திசைதிருப்பக் கூடிய நிகழ்வாக இப்பொருட்காட்சி அமையும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.