• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மின்னஞ்சல் மூலம் 10 நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள்
  2010-01-28 14:21:43  cri எழுத்தின் அளவு:  A A A   

புதுக்கோட்டை ஜி.வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
2009 ஆம் ஆண்டு வாகன உற்பத்தி மற்றும் விற்பனை ஒவ்வொன்றிலும், ஒரு கோடியே 35 லட்சத்தைத் தாண்டி சீனா உலக வாகன சந்தையில் முக்கிய சந்தையாக, முதல் நாடாக மாறி சாதனை புரிந்துள்ளதை செய்திகளில் கேட்டபோது மிகவும் பிரமிப்பாக இருந்தது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் திபெத்தின் நாட்டுப்புற பண்பாட்டின் பாதுகாப்பையும், வளர்ச்சியையும் வலுப்படுத்தும் வகையில் நிதி ஓதுக்கி, அவற்றை சீன அரசு சீராக வளர்த்து வருவதை அறிந்தேன். நாட்டுப்புற பண்பாட்டை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களில் சேர்க்கவும், இலக்கியங்களை தொகுத்து, 38 இலட்சத்து 40 ஆயிரம் எழுத்துக்களை கொண்ட திபெத் நாட்டுப் புற கலைபடைப்புகளாய் இயற்றியுள்ளதும் பெரும் சாதனையே. திபெத் கண்டுள்ள இத்தகைய வளர்ச்சிகளை உலக நாடுகள் அறிந்துகொள்ள வேண்டும்.
பகளாயூர் பி.எ.நாச்சிமுத்து அனுப்பிய மின்னஞ்சல்
வளரும் நாடான சீனா நவீனமயமாக மாறிவருகிறது. இதனை தொடர சீனா நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ள வேண்மென சீன அரசவை உறுப்பினர் தாய்பிங்கோ 22ம் நாள் ஆசியான் செயலகத்தில் உரை நிகழ்த்தியபோது தெரிவித்ததை சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் கேட்டேன். சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கையை நடைமுறையான பிறகு, சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அதேவேளை, வெளிநாடுகளுடன் தொடர்பு, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு விரிவாகி ஆழமாகி வருவது குறிப்பிடத்தக்கது.


பரசலூர், P.S. சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
மழலையர் கல்வியை இலவசமாக வழங்க முயற்சிகள் மேற்கொண்டுவருவதையும், இணைய மூலம் பல்லூடக வசதிகளோடு அமைந்த தொலைக்காட்சி அலைவரிசைகளை, சீன தேசிய இணைய தொலைக்காட்சி ஒலிபரப்பத் தொடங்கியதும் வானலை தொலைநோக்கி ஷாங்காயில் நிறுவப்படுவதையும் மலர்ச்சோலை நிகழ்ச்சியில் கேட்டேன். ஆசிய நாடுகளில் ஒன்றான சீனா வளர்வது ஆசிய நாடுகளிலுள்ள அனைவருக்கும் பெருமையே.
பாண்டிச்சேரி N.பாலகுமார் அனுப்பிய மின்னஞ்சல்
அமெரிக்கப் பாதுகாப்பமைச்சரின் இந்தியப் பயணம் என்னும் செய்தி விளக்கத்தைக் கேட்டேன். பயங்கரவாத எதிர்ப்பில் இருநாடுகளும் பொதுக்கருத்தை வலியுறுத்தி வருவது நாமறிந்ததே. இரு நாடுகளும் பாதுகாப்புத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்வதை விரிவாக்கி, இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பமைச்சர் கேட்ஸ் முன்மொழிந்துள்ளது வரவேற்கதக்கது. இரு நாட்டுப் படைகளின் எதிர்கால கூட்டு ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் இது நிச்சயம் பயன்படும்.


தென்பொன்முடி,தெ.நா.மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்
கோவை மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தின் 2010ஆம் ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 24 ஆம் நாளன்று தெ.நா.மணிகண்டன் அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. செஞ்சீன நாட்டின் குடி மக்களுக்கு புத்தாண்டான புலி ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வாழ்த்துக்கள் தெரிவிப்பது, அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு.S.செல்வம் அவர்களுக்கு பிப்ரவரி மாதம் பாராட்டு கூட்டம் நடத்துவது, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கோவை மாவட்ட சீன வானொலி மன்றக் கூட்டம் நடத்துவது, சீன வானொலி அடுத்து நடத்துகின்ற பொது அறிவுப் போட்டியில் கோவை மாவட்டத்தின் பங்களிப்பை அதிகரிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் திபெத்தில் புகழ்பெற்ற பூச்சியியல் நிபுணர் பற்றிய விவரங்கள் கேட்டேன். இதனை கட்டுரை வடிவில் அல்லாமல் கதை வடிவில் வழங்கிய வாணி அவர்களுக்கு பாராட்டுக்கள். திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் முப்பது ஆண்டுகளாக பல்லாயிரம் நுண்ணிய பூச்சிகளை ஆய்வு செய்து அதனைப் பற்றிய மிகப்பெரிய படைப்பை வெளியிட்டுள்ள வல்லுனரின் தலைசிறந்த சாதனையை பாராட்டுகிறேன். இவரது ஆய்வுகளின் அடிப்படையில் திபெத்தில் பூச்சியியல் ஆய்வுதளம் உருவாக்கபட்டுள்ளது எதிர்கால சந்ததியினருக்கு பயன் தரும்.


1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040