அடுத்து பெய்ஜிங் மாநகரிலுள்ள பண்டைய உறைவிட வடிவம் பற்றி கூறுகின்றேம். ஹூதுங் என்றால் இது பெய்ஜிங் தனிச்சிறப்பியல்பை மிகவும் பிரதிநிதித்துவப்படுத்த வல்ல ஒரு வகை குடியிருப்பாகும். மங்கோலிய மொழியில் ஹூதுங் குட்டுச் சந்து அல்லது குறு வீதி என்று பொருள்படுகின்றது. இத்தகைய உறைவிடம் சீனாவின் யுவான் வம்சக்காலத்தில் உருவாகியது. பெய்ஜிங் மாநகரில் காணப்படும் பெரிய மற்றும் சிறிய சாலைகளின் எண்ணிக்கை 7000க்கு மேலாகும். ஒவ்வொரு சாலைக்கும் ஒரு கதை உண்டு. நபரின் பெயர், அதிகாரியின் பெயர், சந்தை, வணிகப் பொருள் ஆகியவற்றால் சாலைகள் பெயரிடப்பட்டுள்ளன. மிக நீளமான சாலை துங்சிசியோ மின்சியாங் என்பதாகும். அதன் தூரம் 3.25 கிலோமீட்டரை எட்டும். மிகக் குறுகியது சில பத்து மீட்டர் மட்டும். மிக நெருக்கமான சாலை சியென் ஸு சாலை. அதன் அகலம் 0.7 மீட்டர் மட்டும். கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள நான்குலோ சாலை தற்கால பெய்ஜிங்கின் எட்டுத் தனிச்சிறப்பியல்புமிக்க வணிக சாலைகளில் ஒன்றாகியுள்ளது.