நான்கு பக்கம் வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட தோட்டம் என்ற வசிப்பிடம் பெய்ஜிங் மாநகரின் இன்னொரு தனிச்சிறப்பியல்பாகும். தோட்டத்தின் சுவர் ஹூதுங் எனும் குறுவீதி வழியாக செல்லும் சாலையின் எல்லையாகியுள்ளது. வாசல் தவிர சாலையிலிருந்து பார்த்தால் சாளரங்கள் தெரிவதில்லை. ஒவ்வொரு அறையின் சாளரங்களும் வீட்டுக்கு உள்ளேயே திறக்கப்படுகின்றன. உள்ளே அமைதியான சூழல் நிறைந்துள்ளது. அரச குடும்பத்தை சேர்ந்தோர் முதல் சாதாரண பொது மக்கள் வரை இந்த வடிவத்திலான தோட் அமைப்பு வீடுகளில் வாழ்வது பெய்ஜிங் மாநகரின் தனிச்சிறப்பியல்புகளில் ஒன்றாகும். தற்கால வளர்ச்சி வேகத்துடன் இந்த வகை வீடுகள் பெய்ஜிங்கில் குறைந்து விட்டன. நகரை சுற்றிச் செல்லும் இரண்டாவது வளை நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களிலும் இத்தகைய தோட்ட வீடுகள் பரவி வருகின்றன.