கலையரசி......வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.
மணி.........கடந்த நிகழ்ச்சியில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி தி. கலையரசி எஸ் செல்வம் இருவரும் விவாதித்தனர்.
கலை...... ஆமாம். நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்ட பின் நேயர் நண்பர்கள் சிலர் நிகழ்ச்சியை கேட்டுத் தமது கருத்துக்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
மணி.......2010ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி நெருங்கி வரும் வேளையில் நேயர் நண்பர்களுக்கு இது பற்றி அறிமுகப்படுத்துவது பயனுள்ளதாக அமையும் என்பது என் கருத்து.
கலையரசி......நீண்டகாலமாக விளையாட்டுப் போட்டிகள் நிகழ்ச்சியை உருவாக்கும் நீங்கள் இத்தகைய முன்மொழிவு முன்வைப்பது இயல்பே. வரவேற்கத்தக்க முன்மொழிவு.
மணி.......பாராட்டுக்கு நன்றி.
கலையரசி......கலை மணி ஒரு மாபெரும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் இது வெற்றிகரமாக நடைபெறுவதை உத்தரவாதம் செய்யும் வகையில் மருத்துவ அடிப்படையில் பன்முக உறுதியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் அல்லவா?
மணி....... ஆமாம். ஆசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் திங்களில் துவங்கும்.
கலையரசி......அப்படியிருந்தால் அதற்கான விளையாட்டு அரங்குகள் திடல்கள் போன்ற இன்றியமையாத வசதிகள் எந்த அளவில் தயார் செய்யப்பட்டுள்ளன?
மணி....... நீங்கள் குறிப்பிட்ட வசதிகளின் ஆயத்தப் பணிகள் அனைத்தும் தயாராகவுள்ளன.
கலையரசி......இவை தவிர விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்குத் தேவையான மருத்துவ பாதுகாப்பு எந்த அளவில் மேற்கொள்ளப்பட்டது?
மணி.......உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன் குவாங்சோ மாநகரில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆயத்தம் பற்றி செய்தி அறிவிப்பதற்கு பொறுப்பான எங்கள் செய்தியாளரின் கூற்றை கேளுங்கள்.
செப்டம்பர் 13ம் நாள் குவாங்சோ மாநகர சுகாதார ஆணையம், குவாங்சோ ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாராலிம்பிக் விளையாட்டு மருத்துவ சுகாதார பிரிவுகள் இணைந்து நான்பாஃன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மூலிகை மற்றும் மேலை நாட்டு ஒன்றிணைப்பு மருத்துவ மனையில் விளையாட்டு அரங்குகள் அல்லது திடல்களில் திடீரென நிகழும் விபத்து பற்றிய உடனடி மருத்துவ மீட்புதவிப் பயிற்சியை நடத்தின என்று அவர் கூறினார்.
கலையரசி......எனக்குப் புரிந்தது. இந்த மாதிரி மீட்புதவி மூலம் குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மருத்துவ உத்தரவாதம் இறுதி ஆயத்தக் காலத்தில் நுழைந்துள்ளதாக கூறலாம்.
மணி.......ஆமாம்.
கலையரசி...... ஓராண்டு கால ஆயத்தப் பணி பற்றி குவாங்சோ மாநகர சுகாதார ஆணையத்தின் துணைத் தலைவர் zhang li அம்மையார் என்ன சொல்கிறார்?
ஆயத்தப் பணியின் படி ஒவ்வொரு அரங்கிலும் கடும் நோய்வாய்ப்படுபவர்கள் கண்டறியப்பட்ட பின் அவரை அனுப்பும் மருத்துவ மனையின் தொலைவு அரங்கிலிருந்து 30 நிமிட நேரத்துக்குட்பட்டதாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆகவே இந்தப் பரவல் கோரிக்கையின் படி நாங்கள் அரங்கிற்கு ஏற்ற மருத்துவ மனைகளை தேர்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று துணைத் தலைவர் zhang li அம்மையார் கூறினார்.
மணி.......இந்த இலக்குகளை நடைமுறைப்படுத்தும் போது இன்னல்கள் அதிகமாக நிலவுகின்றன.
கலையரசி......ஆமாம். 30 நிமிடங்களுக்குள் நோயாளியை விளையாட்டுப் போட்டி அரங்கிலிருந்து மருத்துவ மனைக்கு அனுப்புவது கடினமானது தானே.
மணி.......தவிரவும், நவம்பர் திங்களில் துவங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள் மற்றும் பிரதேசங்களின் எண்ணிக்கை வரலாற்றில் முன்கண்டிராத அளவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
கலையரசி......ஆமாம். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஏற்கனவே விண்ணப்பம் செய்த மக்கள் தொகை ஒரு லட்சத்து 2 ஆயிரத்தைத் தாண்டியது. ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள சுமார் 40 ஆயிரத்து 400 மாற்றுதிறனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
மணி.......இவ்வளவு அதிகமானோருக்கு மருத்துவ உத்தரவாதம் செய்வது மருத்துவ அலுவலர்களுக்கு அறைகூவலை பணியாகும்.
கலையரசி......ஆகவே சேவைபுரிய வேண்டிய அதிகமான மக்கள், சேவைப் பயன், தரம் ஆகிய பிரச்சினைகளை தீர்க்க குவாங்சோ மாநகரில் 35 மருத்துவ மனைகள் குவாங்சோ பிரதேசத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மருத்துவ மனைகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மணி.......இந்த மருத்துவ மனைகளில் முன்கூட்டியே விளையாட்டுப் போட்டிக்காக நோயாளிப் படுக்கைகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கலையரசி......மருத்துவ சிகிச்சை அணிகளும் விளையாட்டுப் போட்டி நடைபெறும் அரங்குகளில் சேவை புரியும்.