மணி.......மீட்புதவிச் சேவைபுரியும் தன்னார்வத் தொண்டர்கள் உடனடியாக சுறுசுறுப்புடன் உதவியளிக்கும் செயல் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.
கலையரசி......பல்வேறு போட்டிகளின் தனிச்சிறப்பியல்புகளுக்கிணங் ஏற்படக் கூடிய காயம் மற்றும் நோய்களுக்கு தனிச்சிறப்பியல்பான மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும்.
மணி.......இது கொஞ்சம் கடினமான கோரிக்கையாகும்.
கலையரசி......ஆமாம். இதற்காக மருத்துவ திறன் கொண்ட சுமார் ஈராயிரம் தன்னார்வத் தொண்டர்களும் சுமார் நூறு அவசர மருத்துவ உதவி வண்டிகளும் ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவி தயாராக உள்ளனர்.
மணி.......இந்த ஆயத்தம் செய்வதில் பெறப்பட்ட அனுபவங்கள் பற்றி குவாங்சோ மாநகர சுகாதார ஆணையத்தின் துணைத் தலைவர் zhang li அம்மையார் கூறியதாவது.
கலையரசி......மூன்று ஆண்டு கால சேமிப்பு மூலம் நாங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக ஒரு தொகுதி அவசர மருத்துவ உதவி வண்டிகளையும் வண்டியிலுள்ள சிகிச்சை சாதனங்களையும் வாங்கியுள்ளோம். அவசர மருத்துவ உதவியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சியையும் வலுப்படுத்தியுள்ளோம். இதுவரை 660க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களுக்கு வரையறைக்கேற்ற முறையில் மருத்துவ பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
மணி.......ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக அன்றாட மருத்துவ சுகாதார உத்தரவாதம் வழங்குவது தவிர, குவாங்சோ மாநகரில் 15 மருத்துவ அவசர முன்னெச்சரிக்கை திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
கலையரசி......தொற்று நோய், உணவுப் பொருட்களில் நச்சுப் பரவல், பொது இடங்களில் குடி நீர், அணு கதீர்வீச்சு, வேதியியல் பயங்கரவாத அச்சுறுத்தல், உயிரி பயங்கரவாதம் போன்ற எதிர்பாராத சம்பவங்களைச் சமாளிக்க 24 மணி நேர சமாளிப்பு மற்றும் கையாளும் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
மணி.......ஆகவே இப்போது குவாங்சோ மட்டுமல்ல முழுச் சீனாவும் அருமையான ஆசிய விளையாடாட்டுப் போட்டி நடைபெறுவதற்காக பாடுபட்டு வருகின்றன.
கலையரசி......சீன மக்களின் அயாரா முயற்சியுடன் ஆசிய விளையாட்டுப் போட்டி 2008ம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்ற 28வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி போல வெற்றிகரமாக நடைபெறும் என்பதில் ஐயமேயில்லை.
மணி.......சரி நேயர் நண்பர்களே. வாய்ப்பு இருந்தால் நாங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றி மேலும் கூடுதலான தகவல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த முயற்சிப்போம்.
கலையரசி......இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி முடிவடையும் நேரம் ஆகிவிட்டது.
மணி.......அடுத்த முறை மீண்டும் சந்திப்போம்.
கலையரசி......நிகழ்ச்சி நிறைவடையும் போது மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மணி.......நிகழ்ச்சியை கேட்டு ஒரு வரி எழுதுங்கள்.
கலையரசி......நிகழ்ச்சியை மேம்படுத்துவதற்கு உங்கள் கருத்துக்கள் துணை புரியும்.
மணி.......வணக்கம் நேயர்களே.