• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிச்சுவானின் தொல்பொருள் சிதிலப் பாதுகாப்பு
  2011-04-15 16:38:03  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது சீன சிச்சுவான் மாநிலத்தில் அமைகின்ற உலக பண்பாட்டு மரபுச் செல்வமான துஜியாங்யென் சுற்றுலா பிரதேசத்தில் அதிக பயணிகள் காணப்படுகின்றனர். 2000 ஆண்டுகள் வரலாற்றுடைந்த பழங்கால இந்த நீர்நேமிப்பு திட்டப்பணி, இதுவரையும் முக்கிய பங்காற்றி வருகிறது. அங்குள்ள இரு மன்னர் கோயிலின் மறுசீரமைப்புப் பணியைப் பார்த்தால் தான், மக்கள், 2 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வென்ச்சுவான் நிலநடுக்கம் ஏற்படுத்திய சீர்குலையை நினைக்க முடியும்.

வென்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், இரு மன்னர் கோயிலின் கற் கட்டிடப் பகுதி கடுமையமாக சீர்குலைக்கப்பட்டது. எனவே, துஜியங்யென் பிரதேசத்தின் வேறு பழைய கட்டிடங்கள் மறுசீரமைக்கப்பட்ட பின் மீண்டும் பயணிகளை வரவேற்கின்ற போது, இக்கோயில் தொடர்ந்து செப்பனிடப்பட்டு வருகிறது. கோயிலின் முந்தைய கோலத்தை போலவே மறுசீரமைக்கப்பட, இடிபாடுகளிலான ஒவ்வொரு கற்துண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இது பற்றி துஜியாங்யென் தொல்பொருள் பணியகத்தின் தலைவர் fan tuo yu கூறியதாவது

இரு மன்னர் கோயில், நிலநடுக்கத்தில் அதன் மர கட்டுக்கோப்பு பொதுவாக முற்றிலும் சீர்குலைக்கப்பட்டது. இடிபாடுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட கூடிய பொருட்களை மீண்டும் பெற்றோம். இல்லையேல் அவற்றை மீண்டும் உருவாக்குவது கடினம். மறுசீரமைப்புல், கூடியளவில் முந்தைய பாணி, பொருட்கள், வேலைப்பாடு முதலியவை போல மீண்டும் உருவாக்கினோம் என்று அவர் கூறினார்.

ஹெபெய் மாநில தொல்பொருள் பணியகத்தின் பழங்கால கட்டிடப் பாதுகாப்பு ஆய்வகத்தின் நிபுணர் zhao chen, இத்திட்டப்பணியைக் கண்காணிக்கிறார். அவர் ஒரு அருமையான செதுப்பு மரப் பலகையைச் சுட்டி கூறியாதவது

இந்த செதுக்கும் கலைக்கு, வேலையாளரின் 36 வகை கருவிகள் தேவைப்படுகிறது. அவை மிக கவனமான வேலைப்பாடு தேவைப்படுகின்றன என்று அவர் கூறினார்.

200க்கு மேலான தொழிலாளர்கள், 2 ஆண்டுகளுக்கு மேலான கவனமான பணி மூலம் இரு மன்னர் கோயிலின் மறுசீரமைப்புப் பணி நாட்டின் சோதனையை நிறைவேற்றியது. இவ்வாண்டின் இறுதியில் அது பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்படும்.

வரலாற்றை மதிக்கின்ற சீன மக்கள், கூடிய முயற்சி மேற்கொண்டு, வரலாற்றையும் பாரம்பரிய பண்பாட்டையும் ஏற்கின்ற சிதிலங்கள் நிலநடுக்கத்தினால் குலைக்கப்படுவதை தடுக்கின்றனர். இரு மன்னர் கோயிலைப் போல, சியாங் இன கிரமாமங்களும் சீராக மறுசீரமைத்து பாதுகாக்கப்படுகின்றன.

சியங் இனம், சீனாவின் மிக நீண்டகால வரலாற்றைக் கொள்கின்ற சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாகும். வென்சுவான் நிலநடுக்கத்தில், பெய்சுவான் சியங் இன தின்னாட்சி மாவட்டத்திலான maoershi கிராமம், கடுமையாக குலைக்கப்பட்டது. இக்கிராமத்தில் 90 விழுக்காடான வீடுகள் இடிந்து விழுந்தன. கிராமவாசிகளின் திறன் மட்டுமே, தாயகத்தை மறுசீரமைத்து பாரம்பரிய பண்பாட்டைப் பாதுகாப்பது மிக கடினம். ுள்ளூர் அரசு, மறுசீரமைப்பில் சியங் இன பண்பாட்டை வெளிக்கொணர்ப்பதற்கு அதிக முக்கியத்துவளக்கிறது. இங்களு, தன்ச்சிறப்பு மிக்க சியங் இன சுற்றுலா கிராமத்தைக் கட்டியமைத்தது. இக்கிராமத்தின் தலைவர் wang xiaohu கூறியதாவது

மறுசீரமைப்பில் அரசின் வழிக்காட்டல் முக்கிய பங்காற்றியது. மறுசீரமைப்பின் திட்டத்தில், இனத்தின் தனிச்சிறப்பைச் சேர்க்க வகுக்கப்பட்டுள்ளது என்று அவர் அறிமுகப்படுத்தினார்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040