கிராமவாசிகள், குடும்ப ஹொடெல்களை திறத்தி பல்வேறு இடங்களின் பயணிகளை ஈர்க்கின்றனர். தவிர, சுற்றுலா துறையின் வளர்ச்சி, ஜியாங் இன பூத்தையல் வேலையை வளர்த்தது. பூத்தையல் வேலைப்பாட்டு பொருட்களின் விற்பனை, உள்ளூர் குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்ததோடு, இந்த பழைய வேலைப்பாட்டையும் பரவல் செய்தது.
ஜியங் இன கிராமத்தைப் போல, இங்கு தனிச்சிறப்பு வாய்ந்த சிறு நகரங்களும் வளர்ந்து வருகிறது. புதிய கட்டுமானத்தில், பசுமையான வளர்ச்சிக் கண்ணோட்டம் சேர்க்கப்பட்டது. குவாங்துங் மாநிலத்திலிருந்து வந்து இங்குள்ள shuimo மாவட்டத்தின் மறுசீரமைப்புக்கு உதவி செய்கின்ற பணிக் குழு, இங்கு வந்த பின், கவனமான ஆயார்ச்சி செய்த பின்பு தான் புதிய வளர்ச்சி வழியை தீர்மானித்து கட்டுமானப் பணியைத் துவக்கியது. இப்பணி குழுவினர் li jun கூறியதாவது
முன்பு, இம்மாவட்டம், அதிக எரியாற்றலைச்செலவிடுகின்ற தொழிற்துறை பிரதேசமாகும். 63 தொழில்நிறுவனங்கள் கடும் மாசுபாட்டுப் பிரச்சினையை ஏற்படுத்தின. இது, உள்ளூர் மக்களின் உடல்நலத்தையும் சுற்றுச்சூழலையும் கடுமையாக குலைத்தது. முந்தைய இத்தொழிலின் வளர்ச்சி முறை தொடரவல்ல வளர்ச்சி அல்ல. மறுசீரமைப்பில், இத்தகைய பழைய வழியைத் தொடர்க்க முடியாது என்று அவர் கூறினார்.
தற்போது, ஜியங் இனப் பண்பாட்டின் வெளிக்கொணர்வது மூலம், shuimo மாவட்டம் ஒரு புகழ் பெற்ற பண்பாட்டு மாவட்டமாக மாறியது.
ஆயிரம் ஆண்டு கால வரலாற்றுடைய கட்டிடங்கள், பேரிடர்களை அனுபவித்த பிறகு, சீன மக்களால் மறுசீரமைக்கப்பட்டன. எனவே, செங்கல்களிடையில் நிலவுகின்ற பண்பாடும் வரலாறும் தலைமுறை தலைமுறையாக பரவல் செய்யப்பட முடியும். பேரிடருக்குப் பின் தொடர்ந்து நிமிர்ந்து நிற்பதன் எழுச்சி, சீனாவின் ஒவ்வொரு தொல்பொருள் மற்றும் பாண்பாட்டில் சேர்க்கப்பட்டுள்து.