• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நான்காம் நாள்
  2011-08-05 22:47:08  cri எழுத்தின் அளவு:  A A A   

தான்ஷான் மூலிகை

மலையடிவாரங்களில் மூலிகை மருந்துகளை நட்டு வளர்த்து, அதன் மூலம் வருமானம்பெறும் முயற்சியை திபெத் மக்களுக்கு கற்றுக் கொடுப்பதையும் எமக்கு விளக்கினார்கள். ஏறக்குறைய ஐம்பது ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தான்ஷான் மூலிகை மருந்துகளை பார்வையிட்டோம். இந்த மூலிகை சமவெளியிலிருந்து திபெத்திற்கு வரும் மக்கள் ஆக்ஸிஐன் பற்றாகுறையால் துன்பப்பட்டால், மிக சிறந்த மருந்தாம். எனவே திபெத்தில் இந்த மருந்துக்கு அதிக தேவை உள்ளது. இந்த மூலிகைளை நட்டுவிட்டு மூன்று ஆண்டுகள் வரை வளர விட வேண்டும். பின்னர், அதனை பிடுங்கி எடுத்து, மண்ணுக்குள் புதைந்திருக்கும் வேரை கொண்டு மூலிகை மருந்து தயாரிக்கிறார்கள். இவற்றை நான்கு கிராமங்களை கொண்ட வட்டத்தின் தலைவர் ஜியாஜூன் விளக்கி கூறினார்.

பன்றி வளர்ப்பு திட்டம்

ஏழை திபெத்திய மக்கள் அதிக வருமானம் பெறுவதை ஊக்குவிக்க பன்றி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதை கண்டோம். இந்த திட்டத்திற்கு உதவி வழங்குகின்ற ஜியாங்சூ மாநில தலைவர்கள் அத்திட்டத்தில் பயன்பெற்றுள்ள மக்களை சந்தித்து உரையாடி, அந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப் படுகிறாதா? என்பதை நேரில் ஆய்வு செய்ததை பார்த்தோம். அத்திட்டத்திலிருந்து கிடைத்த உதவியால் சுமார் எண்பத்தி ஒன்றாயிரம் பன்றிகளை அக்கிராம மக்கள் வளர்த்து வருகின்றனர்.

கிராம சுற்றுலா வளர்ப்பு

அரசு திட்டங்களுக்கு தேவைப்படும் இடத்தை அரசு கையகப்படுத்தும்போது, அங்கு குடியிருக்கும் மக்கள் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்த படுகிறார்கள். அவ்வாறு குடியமர்த்தப்பட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்று உபசரிக்க தயாராகவுள்ள ஒரு தொகுதி வீடுகளை ஓபாசுன் கிராமத்தில் பார்வையிட்டோம். திருமதி.கேசங் இந்த அரசின் கொள்கையால், அவர்கள் அடைந்த நன்மையை விளக்கினார். மின்னாற்றல் உற்பத்திக்காக அரசு அவர்களின் கிராமத்திலுள்ள வீட்டை கையகப்படுத்தியபோது, பத்து இலட்சம் யுவான் இழப்பீட்டு தொகை பெற்றனர். அதில், எட்டு இலட்சம் யுவானை பயன்படுத்தி தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் இரண்டு மாடி வீட்டை மிக அழகாக கட்டியுள்ளனர். மீதி இரண்டு இலட்சம் யுவானில், அவருடைய மகன் கல் குவாரி பணியில் ஈடுபடுவதற்கு வசதியாக பெரிய பளுதுந்து ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த புதிய வீடு அதிக இடவசதி உள்ளதாய், சிறு கடை, முப்பது சுற்றுலா பயணிகளை உபசரிக்க ஏற்ற வசதிகள், சிறந்த திபெத்திய பாணி அடுக்களை ஆகியவற்றோடு கட்டப்பட்டுள்ளது. கிராமத்தில் சற்று குறைந்த வருமானம் பெற்ற இந்த குடும்பத்தினர் தற்போது, திங்களுக்கு ஐம்பதாயிரம் யுவான் வருமானம் பெறுகின்றனர். சுற்றுலா பயணிகள் வந்து தங்கினால் கிடைக்கும் வருமானம் இதற்கு அப்பாற்பட்டது. இப்போது திருமதி.கேசங், அவரது கணவர், மகன், மருமகள், இரண்டு பேரன்கள் என ஆறு பேர் அந்த வீட்டில் வசிக்கின்றனர். அரசின் இந்த தலைசிறந்த திட்டத்தால், தங்கள் குடும்பம் நல்ல பயன்பெற்றதில் திருமதி.கேசங் மனநிறைவு தெரிவித்தார். அரசு வழங்கிய இழப்பீட்டு தொகையால், இரண்டு மாடியுடைய வீடு கட்டினர். மகன் அவருடைய தொழிலுக்கு தேவையான பளுதுந்தை வாங்கி கொண்டார். எனவே மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக திருமதி.கேசங் குறி்ப்பிட்டார்.

பாயி மாவட்டம்

திபெத் மக்களின் வளர்ச்சிக்கு அரசு எடு்த்து வரும் வேளாண் வளர்ச்சி திட்டம், தான்ஷான் மூலிகை மருந்து வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கிராம சுற்றுலா வளர்ப்பு ஆகிய முயற்சிகளை கேட்டு, அதனால் பயன்பெற்ற மக்களை நேரில் சந்தித்து உரையாடிய பின்னர் மதிய உணவு உண்டோம். சிச்சுவான் பாணியில் காரமான உணவு சாப்பிட்ட பின்னர், பாயி மாவட்டம் நோக்கி புறப்பட்டோம். மாலை நான்கு மணியளவில் பாயி மாவட்டம் வந்தடைந்தோம். அங்குள்ள சொங்சிங் லிற்றில் சைக்நெட் மாளிகை தங்குவிடுதியில் தங்கினோம். மாலை ஏழு மணிக்கு வெளியே உணவகத்திற்கு சென்று கல் பானையில் வைக்கப்பட்ட சூடான கோழி இறைச்சி விருந்து சாப்பிட்டோம்.

முடிவாக

அடுத்த நாள் உயிரின பாதுகாப்பு மண்டலம், மூலிகை மருந்து தயாரிப்பு நிலையம் ஆகியவற்றை சந்திக்க போவதை தலைவர்கள் விளக்கினர். பின்னர் இரவு ஓய்வெடுக்க அவரவர் அறைகளுக்கு திரும்பினோம். நாளை பாயி மாவட்டத்தில் உயிரின பாதுகாப்பு முயற்சிகள் பற்றி உங்களுக்கு தெரிவிப்பேன்.


1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040