சீனா பலவகை தேசிய இனங்கள் ஒன்றிணைந்த நாடாகும். தற்போது சீனாவில், நடுவண் அரசு உறுதி செய்துள்ளபடி 56 தேசிய இனங்கள் இருக்கின்றன. அதில், ஹான் இனம் தவிர மற்ற 55 இனங்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. எனவே, அவை சிறுபான்மை தேசிய இனங்கள் என்ற பெயரைப் பெறுகின்றன. சீனச் சிறுபான்மை தேசிய இனங்கள் பரந்தளவில் பரவுகின்றன. அவை குறைந்தது 2000க்கு மேலான ஆண்டுக்கால வளர்ச்சிப் போக்கைக் கொண்டுள்ளன. இதைத் தவிர, சீனச் சிறுபான்மை தேசிய இனங்களின் பண்பாடுகள் தத்தமது வரலாற்றுப் பாரம்பரியச் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளதால், அவற்றின் ஆடைகளுக்கு உள்ளூர் தனித்தன்மைகள் உண்டு. நீங்கள் கண்டுரசிக்கின்ற ஆடைகள் திபெத் இன மக்கள் அணியும் ஆடைகளாகும்.