ஜுன் திங்கள் 24ம் நாள் பிற்பகல் 1 மணிக்கு, தியன்கோங்-1 விண்கலம், சீன விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் சென்சோ-9 விண்கலத்துடன் விண்ணில் சரியாக இணைந்தது. மக்களை ஏற்றிய விண்கல இணைப்பின் முக்கியத் தொழில் நுட்பத்தைச் சீனா வெற்றிகரமாகக் கையாண்டு வருவதை இது காட்டுகிறது.
விண்வெளியில் 4 நாட்கள் பறந்த பிறகு, சீன விண்வெளி வீரர்கள், செய்முறையின் மூலம் தியன்கோங்-1 விண்கலத்தையும் சென்சோ-9 விண்கலத்தையும் பிரியச் செய்து, மறு நாள் பூமிக்குத் திரும்புவர்.