இத்துறவியர் மடத்தில் அதிகமான அரிய வரலாற்றுத் தொல்பொருட்கள் இருக்கின்றன. அவற்றில், 1757ம் ஆண்டு சிங் வம்ச காலத்தின் சியான்லோங் பேரரசர் இத்துறவியர் மடத்துக்கு வழங்கிய அரசு சிறப்பு நிலை தொல்பொருள் ஒன்று உள்ளது. தங்கத்தைப் பயன்படுத்தி எழுதிய திபெத்தின மொழியில் அமைந்த இந்தத் திபெத் மதமறை தொகுதியில் முழு சேர் கங்யூர் என்ற மதமறை இருக்கிறது. 16 புத்தர் திருவுருவங்கள், நான்கு வானுலக அரசர்களின் உருவங்கள் முதலியவற்றால் உருவாக்கப்பட்ட 24 தாங்கா ஓவியங்களும் இங்கு இருக்கின்றன. மிங் மற்றும் சிங் வம்சங்களின் நடுவண் அரசின் திபெத் அரசுடனான நெருக்கமான உறவை இந்தத் தொல்பொருட்கள் காட்டுகின்றன. இந்த 24 தாங்கா ஓவியங்கள், ஆண்டுதோறும் 3 வாரங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இது, இந்தத் துறவியர் மடத்தில் பிரமாண்டமான விழாவாக உருவாகியுள்ளது.