
முலி துறவியர் மடம், சிச்சுவான் மாநிலத்தின் முலி திபெத் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிச்சாங் நகருக்கு 300 கிலோமீ்ட்டருக்கு அதிகமான தூரத்திலும், மாவட்டத்தின் மையப் பகுதிக்கு சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள இந்தத் துறவியர் மடம், காங்பா திபெத் இனப் பகுதியில் கேலுக் பிரிவைச் சேர்ந்த மிகப் பெரிய துறவியர் மடங்களில் ஒன்றாக உள்ளது. திபெத் இனப் பகுதியில் அது சிறப்பான இடம் வகிக்கிறது.
1656ஆம் ஆண்டு, லாசாவிலுள்ள டிரேபுங்க் துறவியர் மடத்தின் கட்டமைப்பை மாதிரியாகக் கொண்டு இம்மடத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. 300 ஆண்டுகளுக்கு மேலாக, விரிவாக்கப்பட்டு, பழுது பார்க்கப்பட்டு வரும் முலி துறவியர் மடம், 80 ஆயிரம் சதுர மீ்ட்டருக்கு மேலான பரப்பளவுடைய கம்பீரமான கட்டிடக் குழுவாக மாறியுள்ளது.
1 2 3