மிக விறுவிறுப்பான காலத்தில், முலி துறவியர் மடத்தில் 700க்கு அதிகமான லாமாக்கள் இருந்தனர். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற முலி லாமா மன்னராட்சியின் அரசியல், மதம் மற்றும் பண்பாட்டின் மையமாக அது விளங்கியது. 1967ஆம் ஆண்டு இந்தத் துறவியர் மடம் நாசமடைந்தது. 1982ஆம் ஆண்டு, நாட்டின் நிதி ஒதுக்கீட்டுடன், அது முந்தைய இடத்தில் மறு சீரமைக்கப்பட்டு, தற்போதைய நிலைக்கு மீட்கப்பட்டுள்ளது.