சோக்சென் துறவியர் மடம், சிச்சுவான் மாநிலத்தின் கான்ச்சி திபெத் இனத் தன்னாட்சி சோவின் தேகே மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திபெத் புத்த மதத்தின் முக்கியப் பிரிவான நையிங்மா பிரிவின் தாய்க் துறவியர் மடங்களில் ஒன்றாகும். 1684ஆம் ஆண்டு, முதலாவது சோக்சென் தர்மராஜா பாய்மாரென்செங் இத் துறவியர் மடத்தை நிறுவினார். பனி மூடிய திபெத் இனப் பகுதியில், சுமார் 300 கிளைக் துறவியர் மடங்கள் நையிங்மா பிரிவின் அணுகுமுறையைப் படி உருவாக்கப்பட்டுள்ளன.
11வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட நையிங்மா பிரிவு, திபெத் புத்த மதத்தின் சில முக்கியப் பிரிவுகளில் மிக முன்னதாக உருவாக்கப்பட்ட பிரிவாகும். நையிங்மா என்பது, திபெத் மொழியில், பழைமை மற்றும் பழைய என்று பொருட்படுகிறது. 8, 9ஆம் நூற்றாண்டில், புத்த மதத்தின் மறைவான மதம், இந்தியாவிலிருந்து திபெத்திற்குள் பரவி, தந்தையால் மகனுக்குக் கற்றுக் கொடுக்கும் முறையை நிலைநிறுத்துகிறது. போனிசம் மதம், அப்போதைய திபெத்தின் பொது மக்களிடையில் பெரிய செல்வாக்கு உடையது. மறைவான மதமும் போனிசம் மதமும் படிப்படியாக இணைந்து, இறுதியில் நையிங்மா பிரிவை உருவாக்கின.