சோக்சென் துறவியர் மடம், முந்தைய திபெத் அரசின் மதிப்பு மற்றும் ஆதரவைப் பெற்றிருந்தது. பூட்டான் மன்னர், பழங்குடித் தலைவர் தேகே, காங்திங் மாவட்டத் தலைவர் ஜியாலா, சிங்ஹாய் மாநிலத்தின் தற்காலிகத் தலைவர் மா பூஃபாங், மன்னர் கெசாரின் வாரிசு லிங்சாங் ஆகியோர் சோக்சென் தர்மராஜாவின் சீடர்களாக இருந்தனர். அரசின் வலுவான பாதுகாப்பு மற்றும் ஆதரவுடன், சோக்சென் மகாசாந்தி அணுகுமுறை பல்வேறு இடங்களுக்கும் பரவியுள்ளது. தற்போது சோக்சென் துறவியர் மடத்தின் சுமார் 300 கிளைகள், பூட்டான், சிக்கிம், சிங்ஹாய், லாசா, காங்சூ, யுன்னான் முதலிய இடங்களில் பரவி இருக்கின்றன. தற்போதைய இந்தியா, நேபாளம், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், பெல்ஜியம், பிரிட்டன், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் சோக்சென் அணுகுமுறையைப் பரவல் செய்து உருவாக்கப்பட்ட கோயில்களும் புத்த மதச் சடங்கு நடத்தப்படும் இடங்களும் காணப்படுகின்றன.