இந்தக் கட்டுரை பற்றிய இரண்டு வினாக்கள்
ஒன்று, லீ இனப் பண்பாட்டில் வாழ்க்கை பற்றிய மக்களின் எண்ணத்தைக் காட்டும் கண்ணிய நடத்தையின் பொருள் என்ன? இரண்டு, ஹெய்நான் மாநிலத்தில் மிக முன்னதாக வாழ்ந்த பழங்குடியினர் யார்?
சிறப்பான கடல் காட்சியால் தெற்கு சீனாவின் ஹெய்நான் தீவின் சுற்றுலாத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, ஹெய்நான் தீவு, இயற்கை காட்சியையும் பாரம்பரிய பண்பாட்டையும் இணக்கமாக இணைத்து சுற்றுலா மூலவளத்தை வளர்த்து வருகிறது.
இது, ஹெய்நான் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அரங்கேற்றப்பட்ட லீ இன மற்றும் மியவ் இனப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சியாகும். இரண்டு இனங்களின் பாரம்பரிய செவிவழிக்கதைகள், துல்லியமான கைவினை வேலைப்பாடு, மனத்தை உருக்கும் பாடல்கள் முதலியவை இந்த அரங்கேற்றத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
ஹெய்நான் மாநிலத்தில் பல இன மக்கள் கூடி வாழ்கின்றனர். உள்ளூர் சிறுபான்மை தேசிய இனங்கள் பல்வகை தனிச்சிறப்புடைய பாரம்பரிய பண்பாட்டை உருவாக்கியுள்ளனர். அது, மதிப்புக்குரிய பண்பாட்டுச் செல்வமாகும். தவிர, அவை, ஹெய்நான் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா மூலவளமாக மாறியுள்ளன.
சென்யா, லிங்ஷுய், பாவ்திங் முதலிய இடங்களில் பயணிகளுக்கு சிறப்பாக காட்சியை காட்டுகின்ற சிறுப்பான்மை தேசிய இனக் கிராமங்கள் உள்ளன. அங்கு பல்வகை பாரம்பரிய பண்பாட்டு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. ஹெய்நான் மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சி ஆணையத்தின் துணைத் தலைவர் சுன்யிங் கூறியதாவது
லீ மற்றும் மியாவ் இனப் பண்பாடுகளை, சுற்றுலா தொழிலுடன் முழுமையாக இணைக்கிறோம். பின்லாங்கு போன்ற காட்சிப் பிரதேசம், லீ இனத்தின் கிராமத்தால் மாற்றப்பட்டு உருவாக்கப்பட்டது. இங்குள்ள லீ இனத்தின் கதை எனும் அரங்கேற்றம், சீனாவில் 11 பரிசுகளைப் பெற்றுள்ளது. அதைப் பார்த்து லீ இனப் பண்பாட்டை அறியலாம். தவிர,அக்கிராமத்துக்குப் போகும் வழியில், சில லீ மற்றும் மியாவ் இனக் கிராமங்களையும் பார்க்கலாம். இவ்விரு இனங்களின் பண்பாட்டுக்கும் சுற்றுலாவுக்குமிடையிலான இணக்கத்தை இதுவெளிகாட்டுகிறது என்று அவர் கூறினார்.