லீ இனத்தின் பண்பாட்டில், பின்லாங் அதாவது பாக்கு, முக்கிய பங்காற்றுகிறது. அது, லீ இனப் பண்பாட்டில் வாழ்க்கை பற்றிய மக்களின் எண்ணத்தைக் காட்டும். வழிகாட்டி கூறியதாவது
லீ இன மக்களின் மிக முக்கிய நாள் புத்தாண்டு கொண்டாட்டம் அல்ல. மாறாக, திருமண நாள் தான். மாப்பிள்ளை, பெண்ணின் வீட்டுக்குச் சென்று பாக்குகளை அன்பளிப்பாகக் கொடுக்கின்றார். மாப்பிள்ளை 49 பாக்கு மரங்களில் ஏறி 49 பாக்குகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
லீ இன மக்கள், மிக முன்னதாக ஹெய்நான் தீவில் வாழ்ந்தனர். அதன் வரலாறு பல ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது. லீ இனப் பெண்கள், பச்சை குத்தல் செய்வது வழக்கம். வழிகாட்டி கூறியதாவது
பிரதேசம், மொழி, ஆடை ஆகியவற்றின் வேறுபாடுகளால், லீ இன மக்கள் 5 பிரதேச மக்களாகப் பிரிக்கப்பட்டனர். வேறுபட்ட பிரதேச மக்கள், வேறுபட்ட சித்திரங்களை வழிபாடு செய்கின்றனர். ஒவ்வொரு இனப் பிரிவும் தங்களது குறிப்பிட்ட பச்சை குத்தல் சித்திரங்களைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
சமூகத்தின் வளர்ச்சியுடன், தற்போதைய லீ இனப் பெண்கள் பச்சை குத்தல் செய்வதில்லை.
பழமையான சித்திரங்கள், அழகான ஆடைகள், வியப்பளிக்கும் கலை நிகழ்ச்சிகள் முதலியவை, பயணிகளுக்கு அருமையான சுற்றுலா அனுபவங்களை ஏற்படுத்துகின்றன. இங்குள்ள அழகான லீ மற்றும் மியவ் இனக் காட்சி, அவரது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்று பூச்சியென் மாநிலத்தின் பயணி துங் அம்மையார் கூறினார்.
பூச்சியென் மாநிலத்தில் இத்தகைய சிறுபான்மை தேசிய இனங்களின் காட்சிகள் மிக குறைவு. பூச்சியெனிலும் ஹெய்நானிலும் கடல் காட்சியைக் கண்டுரசிக்கலாம். ஆனால், நான் இத்தகைய சிறுபான்மை தேசிய இனக் காட்சியை மேலும் விரும்புகின்றேன் என்று அவர் கூறினார்.
ஹெய்நானின் பாரம்பரிய பண்பாட்டுச் சுற்றுலா, வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென்கொரியா, ரஷியா, ஜெர்மனி முதலிய நாடுகளின் செய்தி ஊடகங்கள் இங்கு வந்து இவ்விடத்தைப் பரப்புரை செய்துள்ளன. பின்லாங்கு லீ மற்றும் மியவ் இனப் பண்பாட்டுச் சுற்றுலாப் பிரதேசத்தின் மேலாளர் லெய்ஜியங் கூறியதாவது
தென் கொரியாவின் கி.பி.எஸ் தொலைக்காட்சி நிலையம் அடிக்கடி இங்கு வந்து ஒளிப்பதிவு உருவாக்கியது. உணவு, ஆடை, நடனம், இசைக் கருவி முதலிய தனிச்சிறப்புடைய பண்பாட்டு வகைகளில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர் என்று அவர் கூறினார்.