கடல் பருவகால வானிலையில் வெப்ப மண்டலத்திலுள்ள சன்யா நகரில், அதிகமான நிலவியல் மூலவளங்களும் வசதியான வானிலையும், தனிச்சிறப்பான இயற்கை காட்சிகளும் மிகுந்துள்ளன. குறிப்பாக வெப்ப மண்டல மழை காடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சான்யா நகரம், வெப்ப மண்டல மழை காடு தோன்றிய இடமாகும். யாலொங் குடா வெப்ப மண்டல வானகக் காட்டுப் பூங்காவில் வெப்ப மண்டல மழை காடு முழுமையாக பாதுகாக்கப்படுகின்றது. அங்குள்ள வெட்ப மண்டல மழை காடு அதன் அடையாளமாக மாறியுள்ளது. வெப்ப மண்டல இலையுதிராத செடிகள், ஓரளவு இலையுதிரும் செடிகள் அங்குள்ள செடிகளின் முக்கிய வகைகளாகும். பல்வகை தாவரங்கள் அங்கே வளர்கின்றன. மொத்தமாக 1500க்கும் மேலான தாவர வகைகள் உள்ளன. காட்டின் அமைப்பு சிக்கலானது. பருவகாலம் மாறும் போது, இந்த பூங்காவில் வெவேறான காட்சிகள் காணப்படலாம். தவிரவும், இப்பூங்காவில், பல்வகை விலங்குகள் உள்ளன. 1000க்கு மேலான பறவை வகைகள் இருக்கின்றன. இப்பூங்காவில் அமைந்துள்ள பூந்தோட்டப் பள்ளத்தாக்கு, பல்வகையான பூக்களால் நிறைந்துள்ளது. ஈரப்பதமான சூழல் மற்றும் வளமான மண், பூக்களின் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தவை. அதனால், பல்வகை பூக்கள் ஹெய்நானில் செழுமையாக மலர்கின்றன.