யாலொங் குடா வெப்ப மண்டல வானகக் காட்டுப் பூங்கா, நகருக்கு மிக அருகிலுள்ள ஆக்ஸிஜன் அகம் என்றழைக்கப்படுகின்றது. காட்டில் அமைந்துள்ள தனித்தனி வீடுகள், பறவைக் கூடு என்றழைக்கப்படுகின்ற உல்லாச ஓய்வகத்தில் அடங்குகின்றன. 140க்கு மேலான வீடுகள் மலையில் கட்டியமைக்கப்பட்டுள்ளன. அவை கடலை நோக்கியிருப்பதால் கடல் காட்சி சிறப்பாக உள்ளது. அவற்றின் தோற்றம், இயற்கையானது. வெப்ப மண்டல தனிச்சிறப்புகள் வாய்ந்தது. சீனாவின் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றான, 《If You Are the One 2》 இங்கே தான் காட்சியாக்கப்பட்டது. அதனால், இங்குள்ள அழகான காட்சிகளை, இத்திரைப்படம் வெளியிட்டதோடு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள உல்லாச ஓய்வகத்தில் தாங்கினால், மலையில் வீசும் தென்றல் காற்று உலவி, சுமையான காட்டை இரசித்து, கடல் காட்சியை இரசித்து, மகிழலாம். சுற்றுலாப் பயணிகள் இங்கு ஓய்வெடுக்கும் போது, இயற்கையான இதமான உணர்வை பெறலாம்.
ஹெய்நான் மாநிலத்தின், பல இடங்களிலும், மக்கள் இயற்கைச் சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழ்வதை அனுபவிக்கின்றனர். பாதை ஓரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விளம்பரம், வழிக்காட்டு பலகை, குப்பைத் தொட்டி பக்கத்தில் செடி வளர்ப்பது, சூரிய ஆற்றல் வசதிகள், மின்னாற்றல் வாகனங்கள் ஆகியவை அங்குள்ள சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமல்ல, எரியாற்றலையும் சிக்கனப்படுத்தும்.
ஹெய்நானின் அழகான நிலத்தில், இயற்கைச் சுற்றுச்சூழலில் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.