நன்ஷான் மலைப் பண்பாட்டுச் சுற்றுலாப் பிரதேசம், ஹாய்நான் மாநிலத்தின் சான்யா நகரில் உள்ளது. புகழ் பெற்ற நன்ஷான் கோயில் இப்பிரதேசத்தில் தான் உள்ளது. ஆண்டுத்தோறும், மக்கள் பலர் தங்கள் அருமையான விருப்பங்கள் மற்றும் மத நம்பிக்கையைக் கொண்டு, இப்பிரதேசத்துக்கு வந்து இறைவேண்டல் செய்கின்றனர். நன்காய் கடலில், அதாவது சீனாவின் தென் கடலில் நிரந்தரமாக வாழ விரும்பும் அவலோகிட்டீஸ்வரா, அக்கடலிலுள்ள வெள்ளை வண்ண சிலையாக மாறி, அங்குள்ள மத நம்பி்க்கை கொண்டோரின் நேர்மையையும், தென் கடலின் அமைதியையும் தொலைத்தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.