அந்தப் பண்பாட்டு மண்டலத்தில், பல வகை பௌத்தச் சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றில் பல, கிழக்காசிய மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவை. பௌத்தம், அதன் பண்பாடு குறித்த பல்வேறு தேசிய இனங்களின் மாறுபட்ட கருத்துக்களை, அச்சிற்பங்கள் வெளிப்படுத்துகின்றன.
நன்ஷான் சுற்றுலாப் பிரதேசத்தில், இன்பம் மற்றும் நீண்ட ஆயுள் குறித்த சீனப் பண்பாட்டுப் பூங்கா இருக்கிறது. அதிலுள்ள இறைவேண்டல் மரங்களில், பல சிவப்பு வண்ண இறைவேண்டல் பலகைகள் இருக்கின்றன, மக்களின் அருமையான விருப்பங்களை அவை வெளிப்படுத்தி, சீனப் பண்பாட்டில் இன்பம் மற்றும் நீண்ட ஆயுளின் பொருளைச் சுற்றலாப் பயணிகளுக்கு விளக்கிக் கூறுகின்றன.