புவியில் வளர்ந்த தேவதையின் மகன் பேரரசு ஒன்றின் அரசு அலுவராக பணியாற்றும் நிலைக்கு உயர்ந்தார். வானுலகில் உண்ட கேக்கின் சுவையை மறக்காத அவர், அதே நிகழ்வை நினைவுக்கூர, சந்திர நாள்காட்டியின்படி, ஆகஸ்ட் பதினைந்து பௌணர்மி நாளில் கேக் செய்து குழந்தைகளுக்கும், பிறருக்கும் வழங்கி கொண்டாட நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார். நடு இலையுதிர்கால விழா நாளில் ஒளிமயமான நிலவை பார்த்துக் கொண்டே குடும்பத்தினர் நிலா கேக் உண்டு, அளவளாவி மகிழ்கின்றனர்.
புராணக்கதைபடி, வானுலகை சேர்ந்த ஒரு தேவதை, மனிதகுலத்தை சேர்ந்த தொங்யோங் என்ற ஆண்மகனை திருமணம் செய்துக்கொண்டார். இன்பமான அவர்களது வாழ்க்கையின் பயனாக அந்த தேவதைக்கும், தொங்யோங்க்கும் மிக அழகிய மகன் பிறந்தார். இன்பமாக நடைபெற்ற அவர்களது வாழ்ககையில் பிரிவு சோகமாக வந்தது. மகனை பிரிந்து வானுக மாளிகைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அந்த தேவதைக்கு உருவானது. தேவதை வானுலகம் சென்றுவிட்டார்.
சந்திர நாள்காட்டியின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் பதினைந்தாம் நாள், அம்மாவின் பிரிவை எண்ணி எண்ணி அந்த தேவதையின் குழந்தை தேம்பி தேம்பி அழ தொடங்குகிறது. அக்குழந்தையின் அழுகை தெய்வங்களில் ஒருவரான வுகாங் தெய்வத்தை மனமுருகச் செய்கிறது. அதனால், அந்த வுகாங் தெய்வம் அக்குழந்தையை வானுலகம் கொண்டு செல்கிறார். மகனை கண்ட மகிழ்ச்சியில் அந்த தேவதை கேக்குகளை செய்து குழந்தைக்கு வழங்குகிறார். புரணக்கதைபடி, நிலா கேக் செய்வது இவ்வாறு தான் தோன்றியது.