சீனாவில் அவர்கள் வெளியிட்ட புத்தகங்களைப் பரப்புரை செய்வது அவர்களது சீனப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். சீன வானொலி தமிழ் பிரிவின் தலைவர் கலைமகளும் பணியாளர்களும் அவர்களைச் சந்தித்துரையாடினர். சீன வானொலியின் 70 ஆண்டுகால வளர்ச்சிச் சாதனைக் கண்காட்சியையும்ப் தமிழ் ஒலிபரப்பின் நேயர்கள் வழங்கிய அன்பளிப்புகளையும் பார்த்தனர். தமிழ் நேயர்களின் உற்சாகத்தை அறிந்து வியப்படைந்து பாராட்டினர்.
அதன் பிறகு தமிழ் பிரிவின் செய்தியாளருக்கு இரவி தமிழ்வணனும் பழனியப்பனும் பேட்டியளித்தனர். அவர்களது சீனப் பயணம், தமிழ் பிரிவு, சீன இலக்கிய வளர்ச்சி முதலியவை பற்றிய கருத்துக்களைத் தெரிவித்தனர். தவிரவும், எஸ்.செல்வம், எஸ் சேகர், கி.ராஜா, எம்.கே பழனிவேல் முதலிய நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.