15வது சீனச் சர்வதேச நட்புறவுப் பண்பாட்டு விழாவும், சீனாவிலுள்ள வெளிநாட்டுத் தூதர்களின் பாரம்பரிய ஆடை அணிவகுப்பும் 22ஆம் நாளிரவு பெய்ஜிங் மாநகரின் சாவ்யாங் பிரதேசத்தில் கலை அரங்கத்தில் நடைபெற்றன. 26 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் தத்தமது நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த ஆடைகளை அணிந்து வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.