கடந்த 15 ஆண்டுகளாக, சீனச் சர்வதேச நட்புறவுப் பண்பாட்டு விழாவின் ஏற்பாட்டுக் குழு சர்வதேச நட்புறவுப் பரிமாற்றத்திற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகையை நிகழ்ச்சிகளை நடத்தி, பல்வேறு நாடுகளின் ஆடைப் பண்பாட்டை வெளிகாட்டுவதன் மூலம், சர்வதேசச் சமூகம் சீனாவை அறிந்து கொள்வதற்கும், சீனா உலக நாடுகளோடு நெருக்கமாவதற்கும் நட்பார்ந்த பாலம் கட்டியமைக்கப்படுகிறது.