சீன அரசவையின் செய்தி அலுவலகம் ஏற்பாடு செய்த சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு நவம்பர் 27ஆம் நாள் முதல் டிசம்பர் முதல் நாள் வரை பிரெஞ்சில் பயணம் மேற்கொண்டது. பிரெஞ்சு தேசிய பேரவையின் மூத்த உறுப்பினர்கள், சர்வதேச மனித உரிமைச் சங்கத்தின் தலைவர், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும், பிரான்ஸில் வாழ் சீன மக்கள், பிரான்ஸில் கல்வி பயிலும் சீன மாணவர்கள், சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர் முதலியோருடன் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு விரிவான பரிமாற்றம் மேற்கொண்டது.