சீன மனிதவள மற்றும் சமூக காப்புறுதி அமைச்சர் யின் வெய்மின்னின் அழைப்பின் பேரில், இந்திய மத்தியமைச்சர் வி.நாராயணசாமி 14ஆம் நாள் தொடக்கம் 17ஆம் நாள் வரை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தலைமையிலான பிரநிதிதிக் குழுவினரை, மனிதவள மற்றும் சமூக காப்புறுதி அமைச்சர் யின் வெய்மின் 15ஆம் நாளன்று சந்தித்துரையாடி, பேச்சுவார்த்தை நடத்தினார். சமூக நிர்வாகம், அரசு அலுவலர்களிடை பரிமாற்றம், சீன மற்றும் இந்திய அரசுப் பணியாளர்களுக்கு கூட்டாக பயிற்சி அளித்தல் போன்ற பல துறைகள் பற்றி, இரு தரப்பும் ஆழமாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டன். இப்பயணத்தை முடித்துக் கொண்டு, நாராயணசாமி தலைமையிலான இக்குழு 17ஆம் நாள் நாடு திரும்புகிறது.