சில கோயில்களையும் கலைமகள் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். 1300 ஆண்டுப் பழமை வாய்ந்த பா•யுவான் கோயில், புத்த மத நம்பிக்கையின் சின்னமாகச் சீனாவில் விளங்குவதை எடுத்துக் காட்டுகிறார்.
430 ஆண்டு வரலாறு கொண்ட வான்சாவ் கோயில், மன்னர் குடும்பக் கோயிலாக விளங்கிய வரலாற்றைப் பற்றிய அரிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. 1068இல் கட்டப்பட்ட தாச்சியே கோயில் சீனப் பண்பாட்டின் சின்னமாக இன்று வரை மிளிர்வது, யூலன் மலர் அந்தக் கோயிலின் சின்னமாக விளங்குவது ஆகியவற்றை இந்நூலின் வாயிலாக அறிய முடிகிறது.