• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பசுமை மணி எனும் பெருமை பெற்ற தாவரத் தோட்டம்
  2013-02-22 16:03:53  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள எல்லை மாநிலம் யுன்னானில் அமைந்துள்ள, XishuangBannaஎனும் பிரதேசம், பருவகால வானிலை உள்ள வெட்ப மண்டலத்தில் உள்ளது. எப்போதும் ஈரப்பதமுள்ளXishuangBannaஇல், நெருக்கமான காடுகளும், பல்வகை தாவரங்களும் உள்ளன. உயர் நிலை தாவர வகைகளின் எண்ணிக்கை, 4000க்கு மேலாகும். முக்கிய பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள தேசிய நிலை தாவரங்களில் 50விழுக்காடு இங்கே வளர்கின்றன. இதனால், தாவர நாடு எனும் பெருமையை,XishuangBannaபெற்றுள்ளது. உலகில் ஒரே கோட்டிலுள்ள இதர பெரும் பிரதேசங்களிலும், ஆள் இல்லாத பாலை வனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்ச்சியில், என்னுடன் இணைந்து, அழகான XishuangBannanக்கு வந்து ரசியுங்கள்.

சீனாவின் மிகப்பெரிய தாவரத் தோட்டமாகவும், உலகின் இரண்டாவது பெரிய தாவரத் தோட்டமாகவும், XishuangBannanகருதப்படுகின்றது. 900 ஹெக்டர் பரப்பில் இருக்கும் XishuangBanna தான் ஒரே ஒரு மண்டலத் தாவரத் தோட்டமாகஉள்ளது. இந்தத் தோட்டம், யுன்னான் மாநிலத்தில், சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த 4 ஆய்வகங்களில் ஒன்றாகும். இது, உலகின் மற்ற இடங்களில் வளரும் தாவரங்கள் அதிகமாக கொண்ட தாவரத் தோட்டமாகும்.

கடந்த நூற்றாண்டின் 60வது ஆண்டுகளில், XishuangBannan வெட்ப மண்டலத் தாவரத் தோட்டத்தை உருவாக்குவது பற்றிய ஆலோசனையை,சீனாவின் புகழ்பெற்ற தாவரயிலாளர்CaiXitao, அப்போதைய தலைமையமைச்சர் Zhou Enlaiயிடம் வழங்கினார். அதற்குப் பின், இத்தோட்டத்தின் வளர்ச்சி, உள்ளூர் இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நெருக்கமாக இணைந்து வருகின்றது. கடந்த 60ஆண்டுகளில், வெட்ப மண்டலக் காடுகளுக்கான மிகப் பெரிய கண்காணிப்புத் தளம் இங்கே மிக முன்னதாக உருவாக்கப்பட்டது. கண்காணிப்புக் கோபுரத்தில், ஒவ்வொரு நிலையிலும், வெட்ப மண்டலக் காடுகளிலுள்ள உயிரினங்கள், நீரியல் மற்றும் காலநிலை முதலியவற்றை, அறிவியலாளர்கள் பன்முகங்களிலும் கண்காணித்து ஆராய்ந்து வருகின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040