இப்பிரச்சினையைத் தீர்க்க, சுற்றுச்சூழலுக்கு நேயமான ரப்பர் மரத் தோட்டத்தை உருவாக்குவது எனும் திட்டம், XishuangBanna வெட்ப மண்டலத் தாவரத் தோட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதைப் பற்றி, லீ ச்சிங் ஜுன் எடுத்துக்கூறியதாவது:
தற்போது, சுற்றுச்சூழல் நேயமான ரப்பர் மரத் தோட்டத்தை உருவாக்க முயற்சி செய்கின்றோம். லான் ச்சாங் சியாங் எனும் ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளுக்கு அருகிலுள்ள குன்றின் சரிவுகளிலும், நெடுஞ்சாலைகளின் நெடுகிலும், மற்றும்உயர் கடல் மட்டத்திலுள்ள இடங்களிலும், ரப்பர் மரத்தை வளர்க்கும் நிலம் மீண்டும் காடுகளாக மாற்றப்பட வேண்டும். தவிர, ரப்பர் மரங்களின் கீழ், கோக்கோ, காப்பி, தேயில் ஆகிய செடிகளையும் வளர்க்கலாம். இது, நீர் மண் பராமரிப்புக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் துணைபுரியும் என்றார் அவர்.
புள்ளி விபரங்களின் படி, சுமார் 4000 காட்டு தாவரங்கள், XishuangBannan பிரதேசத்தில் உள்ளன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் தாவர வகைகளின் எண்ணிக்கையை அறிவியலாளர்கள் சரிப்பார்த்த போது, பல தாவரங்கள் இப்போதுகாணப்படவில்லை. இந்நிலைமை தொடர்ந்து வளர்வதை தடுக்கும் வகையில், XishuangBannan வெட்ப மண்டலத் தாவரத் தோட்டத்தில், 5 மாதங்களுக்கு முன், பூஜியம் அழிவு எனும் திட்டம் செயல்படுத்தப்படத் துவங்கியது. பிரிட்டிஷ் தாவரவியலர் Richard Rrit, இத்திட்டத்தின் பொறுப்பாளர் ஆவார். அவர் கூறியதாவது:
அழிவில் இருக்கும் தாவரங்களின் பாதுகாப்புப் பணி, சீனாவில் விரைவில் வளர்ந்து வருகின்றது. இப்பணிக்கு மேலதிக ஆதரவுகள் தேவைப்படுகின்றன. அத்துடன், மேலதிக தகவல்களின் மூலம், தேவைக்கு இணங்க, பயனுள்ள பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். XishuangBannaபிரதேசத்தில், ஆதிகாலத் தாவரங்களின் அழிவைத் தடுப்பது என்பது, இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். என்றார் அவர்.
தற்போது, பூஜியம் அழிவு திட்டத்தின் செயல் குழு, உள்ளூரில் 3600க்கு அதிகமான தாவரங்களைமதிப்பிட்டுள்ளது.
நேயர் நண்பர்களே, XishuangBannaவெட்ப மண்டலத் தாவரத் தோட்டம் பற்றிய தகவல்களை கேட்டீர்கள். இன்றைய நிகழ்ச்சி மூலம், வெட்ப மண்டலத் தாவரத்தின் பாதுகாப்பு குறித்து, நீங்கள் மேலும் அறிந்து கொள்ள விரும்புகின்றோம். சரி, இன்றைய அழகான யுன்னான் மாநிலம் எனும் சிறப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது. வணக்கம் நேயர்களே.