கைப்பேசிக்காக MP3வடிவில்
நீங்கள் இப்போது கேட்டுக்கொண்டிருப்பது, சா மா குதாவ் யி வூ செங் என்னும் பாடலாகும். சா மா குதாவ் என்பது பழங்கால தேயிலை வர்த்தகப் பாதையாகும். யி வூ செங் என்பது யுன்னான் மாநிலத்தில் தேயிலை விளையும் புகழ் பெற்ற ஒரு மலையாகும். தௌஹூங்யொங் இசையமைத்த அனைத்து பாடல்களிலும், அவரை மிகவும் மனவுருக்கிய பாடல் இதுதான். பழங்கால தேயிலை வர்த்தகப் பாதை மூலம், சரக்குகளை ஏற்றிச்செல்வதில் உள்ளூர் மக்கள் பட்ட இன்னலும், சா மா குதாவின் மலர்ச்சி மற்றும் வீழ்ச்சியும் இப்பாடலில் வெளிக்காட்டப்பட்டுள்ளன. இதோ இப்பாடல் உங்களுக்காக.
தற்போது, யி வூ செங் மாவட்டத்தின் சுற்றுலாப் பாடலும் இது தான். சிஷூவாங்பான்னாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பாதுகாப்புப் பணியில், தௌஹூங்யொங் ஆசிரியர் ஈடிணையற்ற பங்காற்றியுள்ளார். உள்ளூர் அரசின் ஆதரவையும் அனுமதியையும் அவர் பெற்றுள்ளார்.
சிஷூவாங்பான்னா சோவில் தலைமுறை தலைமுறையாக வசித்த பல்வேறு தேசிய இனங்களில், தைய் இனத்தைத் தவிர, பிற சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குச் சொந்தமான எழுத்துகள் இல்லை. அவர்களின் பண்பாடு வாய் மூலம் தான் பரவியுள்ளது. அது பற்றி, தௌஹூங்யொங் ஆசிரியர் மிகவும் கவலைப்படுகிறார். தேசிய இனப் பண்பாட்டின் பாதுகாப்பும் பரவலும் இவ்வின மக்களின் முயற்சியைச் சார்ந்திருக்கும். தௌஹூங்யொங் கூறியதாவது
இளைஞர்கள் பலர் தம் இனத்தின் பண்பாட்டை விரும்பவில்லை. இனத்தின் பண்பாட்டையும் இசையையும் கற்றுக்கொள்ள விரும்புவோர் மிகவும் குறைவு என்றார் அவர்.
தற்போது, சிஷூவாங்பான்னாவின் சிறுபன்மைத் தேசிய இனங்களின் பண்பாட்டுக்கான பாதுகாப்பு மற்றும் பரவலில், சில இன்னல்கள் நிலவுகின்றன என்று இந்த சோவின் தலைவர் தௌலின்யின் வெளிப்படையாகக் கூறினார். சிறுபன்மை தேசிய இனங்களின் பண்பாட்டைச் செவ்வனே பாதுகாத்து முன்னேற்றும் வகையில், சீன அரசும் உள்ளூர் அரசும் தேசிய இனப் பண்பாட்டுத் தொழிலைப் பெரிதும் வளர்ப்பதோடு, இதற்கான சிறப்பு நிதியுதவியையும் வழங்கும்.
நேயர்களே, இதுவரை, சீனாவின் சிஷூவாங்பான்னா தன்னாட்சி சோவின் நாட்டுப்புற இசை பற்றி கேட்டீர்கள். இத்துடன், அழகான யுன்னான் மாநிலம் என்ற சிறப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது. அடுத்த வாரம் மீண்டும் நிலானியுடன் இசை விருந்தை ரசிக்க மறக்க வேண்டாம். வணக்கம்.