• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தற்போதைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைமை]
விளக்கம்

சீனாவின் பெருமெருப்பிலான மயமாக்கந்திற்கு 50 ஆண்டு வரலாறு உண்டு. இருந்த போதிலூம் அதிகமான மக்கள் தொகை வேகமான வளர்ச்சி கொள்கை ரீதியான முந்தைய சில பிரச்சினைகள் ஆகியவற்றினால் சுற்று சூழல் மற்றும் மூல வள பிரச்சினைகள் மிகவும் கடுமையாக உள்ளன. நீர் மற்றும் மண் அரிப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. தரிசு நிலத்தின் பரப்பு தொடர்ந்து பெருகி வருகின்றது. காடுகளின் அளவு கணிசமாகக் குறைந்து வருகின்றது. தாவரங்களின் வளர்ச்சியும் சீர்குலைக்கப்பட்டிருக்கின்றது. உயிரின வகைகள் அழிவின் விளிம்பில் தத்தளிக்கின்றன. நீர் மற்றும் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது.

கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஐ நா சுற்று சூழல் மாநாட்டின் உந்தலின் கீழ் சீனாவின் சுற்று சூழல் பாதுகாப்பு பணி துவங்கியது. 20 ஆண்டுகால வளர்ச்சிக்குப் பின் சீனாவில் ஒரளவுக்கு முழுமையான மாசுத் தடுப்பு மற்றும் மூலவள பாதுகாப்பு பற்றிய சட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட்டுள்ளன. சுற்று சூழலுக்கான முதலீடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் சுற்று சூழல் பாதுகாப்பு கொள்கைகள் இன்னும் முழுமையாக இல்லை. கொள்கை ரீதியில் பார்த்தால் பல கொள்கைகளும் நடவடிக்கைகளும் பல்வேறு நிலை அரசாங்கங்களின் பாரம்பரிய திட்டம் மற்றும் நிர்வாக கட்டளையின் அடிப்படையில் அமைந்துள்ளன. பெரும்பாலான பிரதேசங்களில் அரசாங்க சுற்று சூழல் பாதுகாப்புத் துறைகளின் செயல்பாடு போதாது. இதனால் பல்வேறு கொள்கைகளை நடைமுறைப்படுதிட உத்தரவாதம் தர முடியவில்லை. இது சுற்று சூழல் தரத்தை மேம்படுத்துவதற்கு நேரடித்தடங்கலாக உள்ளது. தற்போது சீன அரசாங்கம் சுற்று சூழல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு நெடுநோக்கு திட்டத்தை முன்வைத்துள்ளது. இதனால் சீனாவில் சீரான சமூக பொருளாதார வளர்ச்சி காணும் அதே வேலையில் மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே ஒழுங்கான தொடர்பையும் நிலைநாட்ட முடியும்.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040