• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தற்போதைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைமை]

நீர் சுற்றுச்சூழல் நிலைமை

சீனாவின் நிலத்தடி நீர் வளத்திற்கு 7 பெரிய ஆறுகண் மூலமாக உள்ளன. இவை யாங்சி ஆறு, மஞ்சள் ஆறு, சொங் குவா ஆறு, லியௌ ஹோ ஆறு முத்து ஆறு, ஹை ஹோ ஆறு, குவாய் ஹோ ஆறு என்பனவாகும். இந்த 7 பெரிய ஆறுகளின் தண்ணீரின் மாசு தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது என்று சீன அரசின் சுற்று சூழல் பாதுகாப்பு தலைமைக் கழகம் வெளியிட்ட 2003 சீன சுற்று சூழல் தரம் எனும் ஆவணம் காட்டுகின்றது.

2003 புள்ளி விபரங்களின் படி சீனாவில் 1-3 தர நீரின் விகிதாசாரம் 37.7 விழுக்காட்டை வகித்தது. 2001ல் இது 3ல் ஒரு பகுதியை கூட அடையவில்லை.

இந்த 7 பெரிய ஆறுகளில் ஹைஹோ, லியௌ ஹொ ஆறுகளின் நீர்மாசு மிகவும் மோசமானது ஏரிகளிலும் நீர் தேக்கங்களிலும் நைட்ரஜின் பாஸ்பரஸ் மாசு அதிகமாக இருப்பதால் நீரில் சத்துப் பொருட்கள் பிரச்சினை முனைப்பாக உள்ளது. குறிப்பான தியென் ச் ஏரியில் இப்பிரச்சினை மிகவும் கடுமையாக உள்ளது. சீனாவின் மூன்றாவது பெரிய ஏரியான தைய் ஹு ஏரியிலும் 5வது பெரிய ஏரியான சௌ ஹூ ஏரியிலும் இப்பிரச்சினை தோன்றியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான நகரங்கள் மற்றும் வட்டாரங்களின் நிலத்தடி நீரின் தரம் பொதுவாக சிறப்பாக உள்ளது. ஒரு பகுதி மட்டும் குறிப்பிட்ட அளவில் மாசு அடைந்துள்ளது. இவை முக்கியமாக உள்ள நகரின் மையப் பகுதிகளில் காணப்படுகின்றன.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040