• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவில் கற்றுக் கொள்வத]
சீனாவுக்கு வந்து கற்றுக் கொள்வது

கடந்த சில ஆண்டுகளில், சீனப் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றது. அதன் சர்வதேச தகுநிலை நாளுக்கு நாள் உயர்ந்துள்ளது. அதனால், மேலதிக அன்னிய இளைஞர்கள் சீனாவுக்கு வந்து கற்றுக்கொள்கின்றனர். தற்போது, சீனாவில் கல்வி பயிலும் அன்னிய மாணவர் எண்ணிக்கை 77 ஆயிரமாகும். இதில் சுய செலவு மாணவர் எண்ணிக்கை 90 விழுக்காட்டுக்கு அகிகமாகும். அவர்கள், தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, வியட்நாம், இந்தோநேசியா, தாய்லாந்து, ஜெர்மனி, ரஷியா, நேபாளம், பிரான்சு, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட 170க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

சீன மொழி, சீனப் பண்பாடு, சீன வரலாறு, சீன மருத்துவம் மற்றும் மருந்து மூலிகைகள் ஆகிய சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சிறப்புத்துறைகளில் அவர்கள் முக்கியமாகக் கல்வி பயில்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில், சட்டம், நிதி மற்றும் பொருளாதாரம், அக்கவுண்டிங் ஆகிய சிறப்புகள், அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள் ஆகியவற்றில் அவர்கள் சேரத் துவங்கினர்.

சீனாவில் கல்வி பயிலும் அன்னிய மாணவர் எண்ணிக்கையை மேலும் விரிவுபடுத்துவதற்கு சீன அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. எடுத்துக்காட்டாக, வளாகத்துக்குப் புறம்பான குடிமக்களின் வீட்டில் அன்னிய மாணவர்கள் தங்கி வசிப்பதற்கு அனுமதி அளிக்கின்றது. இதனால் சீன மக்களுடன் அவர்கள் மேன்மேலும் தொடர்பு கொள்கின்றனர். சீனாவை மேலும் ஆழமான முறையில் அறிந்து கொள்கின்றனர். ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் பாடம் வழங்கும் வழிமுறையை நடைமுறைப்படுத்தி, சீன மொழி நிலை குறைவான மாணவர்களை ஈர்த்துள்ளது.

நவ சீனா நிறுவப்பட்டது முதல் இது வரை, சீனாவுக்கு வந்து கல்வி பயின்ற அன்னிய மாணவர்கள், 170 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தமது நாட்டின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கும் தமது நாட்டுக்கும் சீனாவுக்குமிடையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கும் அவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040