சீன மொழியைக் கற்றுக் கொள்வது
சீன மொழியைக் கற்றுக் கொள்வதற்காகவே, அன்னிய மாணவர் பலர் சீனாவுக்கு வருகின்றனர். தற்போது, சீனாவிலான அன்னிய மாணவர்களில் 60 விழுக்காட்டினர் சீன மொழியைக் கற்கின்றனர். சீனாவில் சீன மொழி பயிலும் கல்விக் காலம், வளைந்து கொடுக்கும் முறையில் அமைந்துள்ளது. சீனாவில், சில மாதங்கள் அல்லது சில வாரங்கள் நீடிக்கும் குறுகிய கால வகுப்பு, 4 ஆண்டுப் பட்டப்படிப்பு ஆகியவை உண்டு. அன்னிய மாணவர்களுக்கு ஏற்ற பல்வகை சீன மொழி பாடநூல்களை சீனா வகுத்துள்ளது. மாணவர்களின் வெவ்வேறான கல்வி நிலைக்கேற்ப, இரு வகை மொழிகள் அல்லது சீன மொழியில் பாடம் கற்பிக்கப்படுகின்றது.
சீனாவுக்கு வந்த மாணவர்களில் பெரும்பாலோர் பல்கலைக்கழகங்களில் சீன மொழி கற்கின்றனர். தற்போது, சீனாவுக்கு வந்த இத்தகைய அன்னிய மாணவர்களை 300 உயர் கல்வி நிலையங்கள் ஏற்றுக்கொள்கின்றன. தன் நிலைக்கேற்ப, இந்த உயர் கல்வி நிலையங்களுடன் மாணவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
1992ஆம் ஆண்டு முதல், சீனாவில் Chinese Tofel என்ற சீன மொழித் தேர்வு நடத்தப்படுகின்றது. இது, பல நிலைகளில் அமைகின்றது. தற்போது, சீனாவிலும் 28 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் தேர்வு நடைபெறும் இடம் நிறுவப்பட்டுள்ளது.
1 2 3