சீனப் பல்கலைக்கழகங்களில் கற்பது
சீனப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றால், ஒத்த கல்வித் தகுதி, குறிப்பிட்ட சீன மொழி நிலை ஆகியவை தேவைப்படுகின்றன. பல்வேறு உயர் கல்வி நிலையங்களின் கோரிக்கைக்கேற்ப, நுழைவுத் தேர்வில் சில மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இணையத்தின் மூலம், சீனாவின் உயர் கல்வி நிலையங்களுடன் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். தேர்ச்சி பெற்றதும், சீனாவில் கல்வி பயிலும் செயல் முறையை அவர்கள் வசதியாக்கிட முடியும்.
சீனப் பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணம் குறைவு. மாணவர் பயிலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் சிறப்புத் துறைகளுக்கேற்ப, கல்விக் கட்டணம் மாறுபடுகின்றது. தற்போது, இது பொதுவாக ஆண்டுதோறும் 20 ஆயிரம் யுவானாகும்.
அன்னிய மாணவர் சீனாவில் உயர் நிலைக் கல்வி பெறுவதை ஈர்ப்பதற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. சீனக் கல்வியின் சர்வதேச தகுநிலையை உயர்த்தி, உலகின் முதல் தர பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக சீனா இதைக் கருதுகின்றது. மேலதிக மாணவர்கள், குறிப்பாக ஆராய்ச்சி மாணவர்கள் சீனாவுக்கு வந்து கற்பதை ஈர்க்கும் பொருட்டு, சீனாவுக்கு வந்து கல்வி பயிலும் சூழலை மேம்படுத்த சீனா நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

(சீனாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள்)
1 2 3