• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன-அமெரிக்க-ஜப்பான்-ரஷிய உறவு]
சீன-அமெரிக்க உறவு  

1972ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் அமெரிக்க அரசு தலைவர் நிக்சன் சீனப் பயணம் மேற்கொண்டார். சீன-அமெரிக்க கூட்டறிக்கை அதாவது சாங்காய் அறிக்கையை இரு நாடுகளும் வெளியிட்டன. இதனால், கடந்த 22 ஆண்டுகளாக இரு நாடுகளும் தொடர்பு கொள்ளாத நிலைமை முடிவுக்கு வந்தது. தூதாண்மை உறவை நிறுவுவது பற்றிய சீன மக்கள் குடியரசு மற்றும் U.S.A கூட்டறிக்கை 1978ம் ஆண்டு டிசெம்பர் 16ந் நாள் வெளியிடப்பட்டது. 1979ம் ஆண்டு ஜனவரி முதல் நாளன்று, இரு நாடுகளுக்கிடையிலான தூதர் நிலைத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டது. 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ந் நாள், சீனாவும் அமெரிக்காவும் ஆகஸ்ட் 17 கூட்டறிக்கையை வெளியிட்டன. தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது பற்றிய பிரச்சினையைப் படிப்படியாக இறுதியில் தீர்ப்பதென முடிவு மேற்கொள்ளப்பட்டது.

1984ம் ஆண்டு ஜனவரி திங்களில் சீனத் தலைமையமைச்சர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். ஏப்ரல் திங்களில் அமெரிக்க அரசு தலைவர் றீகன் சீனப் பயணம் மேற்கொண்டார். 1985ஆம் ஆண்டு ஜூலை திங்கள், சீன அரசு தலைவர் லீ சியெநியென் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டது சீன அரசு தலைவர் அமெரிக்கப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

1998ம் ஆண்டு ஜனவரி திங்களில், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் வெலி.கொஅன் சீனப் பயணம் மேற்கொண்டார். கடற்பிரதேச ராணுவப் பாதுகாப்பை வலுப்படுத்துவதென்ற கலந்தாலோசனை முறைமையின் உருவாக்கம் பற்றிய சீன-அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இரு நாட்டு அரசு தலைவர்களுக்கி டையிலான நேரடி சிறப்புத் தொலைபேசி நெறி மூலம், சீன அரசு தலைவர் சியாங்செமிங்கும் அமெரிக்க அரசு தலைவர் கிலின்டனும் மே 25ந் நாள், முதல் முறையாகத் தொடர்பு கொண்டனர். தென்னாசிய நிலைமை சீன-அமெரிக்க உறவு ஆகியவை பற்றி அவர்கள் உரையாடினர்.

1998ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 25ந் நாள் முதல் ஜூலை திங்கள் 3ந் நாள் வரை, அமெரிக்க அரசு தலைவர் கிலின்டன் சீனவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். முக்கிய சர்வதேச பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த அவர்கள் உடன்பட்டனர். 21வது நூற்றாண்டை எதிர்நோக்கும் சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வ நெடுநோக்குக் கூட்டாளி உறவை நிறுவுவதென்ற குறிக்கோளை நோக்கி வேகமாக முன்னேறும் வகையில், கூட்டு முயற்சி மேற்கொள்வதென, அவர்கள் உடன்பாட்டனர். தத்தம் கட்டுப்பாட்டின் கீழுள்ள போர்த்தந்திர அணு ஆயுதங்களை எதிர்த் தரப்புக்கு எதிராக பயன்படுத்தாது என முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொருளாதார மற்றும் நாணயத் துறையிலான நெடுநோக்குத் திட்டப் பேச்சுவார்த்தையை மேலும் வலுப்படுத்தி, உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணயத்தின் சீரான வளர்ச்சியை முன்னேற்றுவிப்பதற்கு ஆக்கபூர்வ பங்கு ஆற்ற, அவர்கள் இசைந்துள்ளனர்.

சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 1999ம் ஆண்டு ஜனவரி முதல் நாளன்று, இரு நாட்டு அரசு தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து மடல் அனுப்பினர். ஏப்ரல் 6ந் நாள் முதல் 14ந் நாள் வரை, சீனத் தலைமையமைச்சர் சூழோங்சி அதிகாரப்பூர்வமான அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். கடந்த 15 ஆண்டுகளில் சீனத் தலைமையமைச்சர் ஒருவர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

1999ம் ஆண்டு மே 8ந் நாள், அமெரிக்க தலைமையிலான நேட்டோ, 5 ஏவுகணைகளால், யூகோஸ்லாவியாவிலுள்ள சீனத் தூதரகத்தைக் குறி வைத்துத் தாக்கியது. இதில் 3 சீனச் செய்திமுகவர் உயிர் இழந்தனர். 20க்கும் அதிகமான தூதரகப் பணியாளர் காயமுற்றனர். தூதரகம் கடுமையாகப் பாழானது. அமெரிக்காவின் இச்செயல் குறித்து, சீன மக்கள் பேராத்திரமடைந்தனர். சீன-அமெரிக்க உறவு ஓரளவு பாதிக்கப்பட்டது.

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு நிறுவனத்தின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற மாநாட்டின் போது, செப்டெம்பர் 11ந் நாள், சியாங்செமிங்கும் கிலின்டனும் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கப்பூர்வ சாதனை பெற்றனர்.

2000ல் பல்வேறு துறை உயர் நிலை அதிகாரிகளுக்கிடையிலான இரு நாட்டுப் பரிமாற்றமும் ஒத்துழைப்பும் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தக் கடன் ஒதுக்கீட்டுச் சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் 2000 டிசெம்பர் 15ந் நாள் நிறைவேற்றியது. அமெரிக்காவின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட யூகோஸ்லாவியா வுக்கான சீனத் தூதரகத்துக்கு 2 கோடியே 80 லட்சம் அமெரிக்க டாலர் நட்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்தது.

2001ம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் முற்பகல், அமெரிக்காவின் EP-3 என்னும் ராணுவ உளவு விமானம், சீன ஹைனான் தீவின் தென் கிழக்கில் 104 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடற்பிரதேசத்தின் மேல் சீனாவை வேவு பார்த்த போது, அதைப் பின்பற்றிக் கண்காணிக்கும் சீனத் தரப்பின் சியெபா எனும் விமானத்தை மோதி நொறுக்கியது. சீன விமானி வாங்வெய் உயிர்த் தியாகம் செய்ய நேரிட்டது. பின்னர், இவ்விமானம், அனுமதி பெறாத நிலையில், சீனாவின் உரிமைப் பிரதேசத்தில் நுழைந்து, ஹைனான் தீவிலுள்ள லின்சுவெய் ராணுவ விமான நிலையத்தில் இறங்கியது. அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதியும் சீனாவுக்கான அமெரிக்கத் தூதருமான ப்லிஹ, அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் வழங்கிய மன்னிப்புக் கடிதத்தை, ஏப்ரல் 11ந் நாள், சீன வெளியுறவு அமைச்சர் தாங்சியாசியென் ஏற்றுக்கொண்டார்.

செப்டெம்பர் 11ந் நாள், அமெரிக்காவின் நியூயார்க்கும் வாஷிங்டனும் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளாயின. கடும் உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்பட்டது. அக்டோபர் 19ந் நாள், சீன அரசு தலைவர் சியாங்செமிங்கும் அமெரிக்க அரசு தலைவர் புஷும் சாங்காயில் பேச்சுவார்த்தை நடத்தி, சீன-அமெரிக்க உறவு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, கருத்து ஒற்றுமைக்கு வந்தனர். சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புறவின் வளர்ச்சிக்காக இணைந்து பாடுபட உடன்பட்டனர்.

2002ல், சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான போக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சீன அரசு தலைவர் சியாங்செமிங்கின் அழைப்புக்கிணங்க, அமெரிக்க அரசு தலைவர் புஷ், சீனாவில் சீன-அமெரிக்க உறவு பற்றிய பணிப் பயணம் மேற்கொண்டார். இரு நாட்டு அரசு தலைவர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்புறவு, தற்போதைய சர்வதேச நிலைமை ஆகியவை பற்றி விவாதித்தனர். சீனாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கருத்து வேற்றுமையை உரிய முறையில் கையாண்டு, சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வ ஒத்துழைப்புறவின் வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுவிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். 2002ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் மெக்சிகோவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்தின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன், அரசு தலைவர் புஷின் அழைப்புக்கிணங்க, சீன அரசு தலைவர் சியாங்செமிங், அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். தைவான் பிரச்சினையை உரிய முறையில் கையாள்வது என்பது, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று புஷிடம் சியாங்செமிங் வலியுறுத்தினார். அமெரிக்கா, ஒரு சீனா என்னும் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிப்பதும் 3 சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளுக்கிணங்கச் செயல்படுவதும் அமெரிக்க அரசின் நீண்டகால, நிலையான கொள்கையாகும். அது மாறவில்லை என்று புஷ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040