• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன-அமெரிக்க-ஜப்பான்-ரஷிய உறவு]

சீன-ரஷிய உறவு  

1949ஆம் ஆண்டு அக்டோபர் 2ந் நாள், சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையில் தூதாண்மை உறவு நிறுவப்பட்டது. 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள், சோவியத் யூனியன் கலைந்துவிட்டது. டிசெம்பர் 27ந் நாள், சீனாவும் ரஷியாவும் பேச்சுவார்த்தைக் குறிப்பில் கையொப்பமிட்டன. சீனாவுக்கும் முன்னாள் சோவியத் யூனியனுக்குமிடையிலான தூதாண்மை உறவு தீர்க்கப்பட்டுள்ளது. 2001ல், சீன-ரஷிய நெடுநோக்குத் தந்திர ஒத்துழைப்புக் கூட்டாளி உறவு புதிய நிலைக்கு வந்தது. இரு தரப்புக்கிடையில் பரஸ்பர அரசியல் நம்பிக்கை ஆழமாகியுள்ளது. உயர் நிலை தொடர்பு நெருங்கியுள்ளது. அரசு தலைவர் சியாங்செமிங்கும் அரசு தலைவர் புதினும் ஓராண்டுக்குள், 3 முறை சந்திப்பு நடத்தி, 6 முறை தொலைபேசி தொடர்பு கொண்டனர். 2001ல், இரு நாட்டு அரசு தலைவர்கள் கையொப்பமிட்ட சுமுக அண்டை நாட்டு நட்புறவு உடன்படிக்கையும் வெளியிட்ட கூட்டறிக்கையும், இரு நாடுகளும் இரு நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நட்பாக வாழ்ந்து என்றுமே எதிரியாகக் கொள்ளாத சமாதான சிந்தனையைச் சட்ட வடிவத்தில் நிர்ணயித்துள்ளன.

2003ஆம் ஆண்டு மே 26ந் நாள் முதல் 28ந் நாள் வரை, சீன அரசு தலைவர் ஹு சிங்தாவ் ரஷியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளில், இரு தரப்பு பொருளாதார-வர்த்தக உறவும் பொருளாதாரத் தொழில் நுட்ப ஒத்துழைப்பும் மேன்மேலும் நெருங்கிவருகின்றன. பண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம், கல்வி ஆகிய துறைகளிலான பரிமாற்றமும் ஒத்துழைப்பும் அதிகரித்துவருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், சீன இசை நடனக் குழு, சிங்ஜியாங் இசை நடனக் குழு, சீன எழுத்தாளர் பிரதிநிதிக் குழு, பெய்ஜிங் மெலான்பாங் பீக்கிங் ஒபில இசை நாடகக் குழு, ரஷிய சியௌபெய்ஹுவா நடனக் குழு, கிரெம்லின் மாளிகை பாலே நடனக்குழு, மாஸ்கோ தொன்மை வாய்ந்த பாலே நடனம், சம்பெத்போ இசைக் குழு, மாஸ்கோ அரசு ஒத்திசைக் குழு உள்ளிட்ட கலைக் குழுக்கள் பரஸ்பர பயணம் மேற்கொண்டன.

எல்லைப் பிரச்சினை. சீன-ரஷிய எல்லைக் கோட்டின் முழு நீளம் சுமார் 4370 கிலோமீட்டராகும். இரு நாடுகளுக்கிடையில் வரலாறு விட்டுச்சென்ற எல்லைப் பிரச்சினைகள் நிலவுகின்றன. தற்போதைய இரு நாட்டு எல்லைப் பிரதேச உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டத்தின் வரையறைகளுக்கிணங்க, சமத்துவம், கலந்தாலோசனை, பரஸ்பரம் புரிந்துகொள்வது, விட்டுக்கொடுப்பது ஆகிய எழுச்சிக்கிணங்க, பல ஆண்டு காலப் பேச்சுவார்த்தை மூலம், சுமார் 97 விழுக்காட்டு எல்லைக் கோட்டை இரு நாடுகள் நிர்ணயித்துள்ளன.

தற்போது, சீன-ரஷிய எல்லைப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலான ஹெய்சியாசி தீவு, அபாகெதுசோ ஆகிய இரு பிரதேசங்களின் எல்லைக்கோடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இரு தரப்பும் நீதி நியாயம், சமத்துவம், பரஸ்பர புரிந்துகொள்ளல், விட்டுக்கொடுத்தல் என்ற கோட்பாட்டுக்கிணங்க, எஞ்சிய எல்லைப் பிரச்சினையைக் கூடிய விரைவில் தீர்க்கும்.


1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040