• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன சுற்றுலா வழிக்காட்டி]
 

சீன சுங்கத் துறையின் விதி முறைகள்

சீன நுழைவாயில் மூலம் சீனாவில் நுழையும் போது, சீன சுங்கத்துறையின் தொடர்புடைய விதிகளின் படி, சில விதி முறைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

விண்ணப்பம்

பயணிகள் தங்களுடன் சேர்ந்து கொண்டு போகும் பொருட்களையும் அல்லது வேறு வழிமுறை மூலம் அனுப்பும் பொருட்களையும் உள்ளபடி விண்ணப்பிக்க வேண்டும்.

வரி வசூல் பொருட்கள் அல்லது, வரம்புக்குள் கட்டுப்படுத்தப்படும் வரி விலகல் பொருட்கள்:

சொந்த பயன்பாட்டு பொருட்களும், விதியைத் தாண்டி, ஆனால் வழியில் பயன்படும் பொருட்களும்

சீனாவுக்கு கொண்டுவர அல்லது வெளிநாடுகளுக்கு கொண்டு போக தடுக்கப்படும் பொருட்களும், கட்டுப்பாட்டுடன் உள்ளே கொண்டுவரும் அல்லது வெளியே கொண்டு போகும் பொருட்களும். எடுத்துக் காட்டாக, தொல் பொருள், நாணயம், தங்க அல்லது வெள்ளி பொருட்கள், அச்சடிக்கப்பட்ட பொருட்கள், ஒலி மற்றும் ஒளி பதிவு பொருட்கள்

சரக்குகள், மாதிரி பொருட்கள், பயணியின் மூட்டை முடிச்சுகள் தவிர்த்த பொருட்கள்

சிவப்பு மற்றும் பச்சை ஊடுவழி

வரி கட்ட வேண்டிய, அல்லது சுங்கத் துறையின் பரிசோதனைக்குள்ளாக வேண்டிய பயணிகள் சிவப்பு ஊடுவழியில் நுழைய வேண்டும். இதர பயணிகள் பச்சை ஊடுவழி மூலம் செல்லலாம்.

பொது விதிகள்

சுங்கத்தை கடக்கும் போது, அனைத்து மூட்டை முடிச்சுகளையும் சுங்கத் துறையின் பரிசோதனைக்கு போட வேண்டும். அனுமதிக்கப்படாத பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது. வேறு வழிமுறை மூலம் அனுப்ப வேண்டிய பொருட்கள் விண்ணப்பப் படிவத்தில் தெளிவாக எழுதப்பட வேண்டும். பயணிகள் சீனாவுக்குள் நுழைந்த நாள் முதல், 6 திங்கள் காலத்துக்குள் வந்த பொருட்களை சுங்கத்துறை பரிசோதனை முடிந்து பெற்றுக்கொள்ளலாம்.

சுங்கத் துறை சரிபார்த்து முத்திரை போட்ட பயணிகளின் மூட்டை முடிச்சு பற்றிய விண்ணப்ப படிவத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். போய் வரும் போது அல்லது தொடர்புடைய விதி முறைகளை நிறைவேற்றும் போது பயன்படுத்தலாம்.

தவிர, பயணிகள் தொல் பொருட்களை வெளியே கொண்டு போனால் சுங்கத் துறைக்கு கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும். விற்பனை அனுமதி பெற்ற கடையிலிருந்து வாங்கிய தொல் பொருட்களை, கடையின் பற்று சீட்டையும் சீன தொல் பொருள் நிர்வாகப் பிரிவின் முத்திரையுடன் கூடிய பரிசோதனை அடையாளத்தையும் காட்டினால் சுங்கத் துறை விட்டுவிடும். பயணிகள் சீனாவில் இதர வழிமூலம் பெற்ற தொல் பொருட்கள், எடுத்துக்காட்டாக, வீட்டில் வைத்துக்கொள்ளும் தொல் பொருட்கள், நணபர்கள் வழங்கிய தொல் பொருட்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து வெளியே கொண்டு போக வேண்டுமானால் முன்னதாக சீனத் தொல் பொருள் நிர்வாகப் பிரிவு தணிக்கை செய்ய வேண்டும். தற்போது, பெய்சிங், ஷாங்கை, தியன்சின், குவாங்சோ உள்ளிட்ட 8 நுழைவாயில்களில் இத்தகைய தணிக்கை பிரிவுகள் உள்ளன. தணிக்கைக்குள்ளாகி, அனுமதி சான்றிதழ் பெற்றுள்ள தொல்பொருட்களை சுங்கத் துறை விட்டுவிடும்.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040