• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீன சுற்றுலா வழிக்காட்டி]

சீன நாணயத்தின் பயன்பாடு

சீன நாணயம்

சீன நாணயத்தின் பெயர் ரென்மின்பி என்பதாகும். சீன மக்கள் வங்கி இதை வெளியிடுகின்றது. ரென்மின்பியின் பிரிவு யுவான், அதன் கீழ் ஜியோ, பென் ஆகும். ஒரு யுவான் பத்து ஜியோவுக்கு சமம். ஒரு ஜியோ பத்து பெனுக்கு சமமாகும். ஒரு யுவான், இரண்டு யுவான் ஐந்து யுவான், பத்து யுவான், ஐம்பது யுவான், நூறு யுவான் என்றும் ஒரு ஜியோ, இரண்டு ஜியோ, ஐந்து ஜியோ என்றும் ஒரு பென், இரண்டு பென், ஐந்து பென் என்றும் ரென்மின்பி பிரிக்கப்படுகின்றது. RMB என்பது ரென்மின்பியின் சுருக்க எழுத்து வடிவமாகும்.

நாணய மாற்றம்

சீனாவின் ரென்மின்பியுடன் பரிமாற்றக் கூடிய வெளிநாட்டு நாணயங்கள் வருமாறு, அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட், பிரான்ஸின் பிரான்க், ஜெர்மனியின் மார்க், ஜப்பானிய யென், ஆஸ்திரேலிய டாலர், ஆஸ்திரிய SCHILLING, பெல்ஜிய பிரான்க், கனேடிய டாலர், ஹாங்காங் டாலர், சுவீட்சர்லாந்து பிரான்க், டென்மார்க் KRONE, நெதர்லாந்து GUILDER, நார்வே KRONE, சுவீடன் KRONE, சிங்கப்பூர் டாலர், மலேசிய RINGGIT, இத்தாலி LIRA, மகௌ டாலர், பின்லாந்து MARKKA. வங்கிகளில் இந்த பணங்களை மாற்றலாம்.

சீனாவின் அந்நிய செலாவணி நிர்வாக சட்ட விதிகளின் படி, சீன மக்கள் குடியரசின் பிரதேசத்துக்குள் வெளிநாட்டு நாணயம் புழக்கத்தில் இருக்கக் கூடாது. அத்துடன் வெளிநாட்டு நாணயத்தைக் கொண்டு கணக்கிடக் கூடாது. சுற்று பயணம் செய்ய சீனாவரும் வெளிநாட்டு விருந்தினர்களும் ஹாங்காங், மகௌ மற்றும் தைவான் உடன் பிறந்தோரும் பணத்தை பயன்படுத்துவதற்கு வசதி வழங்கும் வகையில் சீன வங்கியும் குறிப்பிட்ட இதர வங்கிகளும் வெளிநாட்டு நாணய சுற்றுலா காசோலையையும், வெளிநாட்டு கடன் அட்டையைக் கொண்டு ரென்மின்பியை மாற்றும் அலுவலையும் ஏற்றுக்கொள்கின்றன. 22 வகை வெளிநாட்டு ரொக்கப் பணமும் தைவானின் புதிய ரொக்க பணமும் ரென்மின்பியை மாற்றும் அலுவலையும் ஏற்றுக்கொள்கின்றன. பணம் பரிமாற்றம் செய்வோருக்கு கூடிய அளவில் வசதி வழங்கும் வகையில் சில வங்கிகள் தவிர, ஹோட்டல்களும் கடைகளும் இந்த அலுவலை கையாளலாம். மாற்றிய ரென்மின்பியை எல்லாம் பயன்படுத்த முடியவில்லை என்றால், சீனாவை விட்டு புறப்படுவதற்கு முந்திய 6 திங்களில் செல்லுபடியாகும் பரிமாற்றப் பத்திரத்தைக் கொண்டும் எஞ்சிய ரென்மின்பியை வெளிநாட்டு பணமாக மாற்றி, வெளிநாட்டுக்கு கொண்டு பொகலாம்.

சீனாவில் வெளிநாட்டு கடன் அட்டை

தற்போது சீனாவில் கீழ் வரும் வெளிநாட்டு கடன் அட்டைகள் செய்யப்படலாம். MASTER CARD, VISE CARD,AMERICAN EXPRESS CARD, JCB CARD, DINERS CARD.


1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040