• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைக்கால கட்டிடங்கள்]
பண்டைக்கால கட்டிடங்கள் பற்றி  

சீனாவின் பண்டைக்காலக் கட்டிடங்களில் ஹான் இனத்தின் மரக் கட்டிடங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அவற்றில் பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்களின் தலைச்சிறந்த கட்டிடங்களும் அடங்கும். இந்த பண்டைக்கால கட்டிடங்கள் சீனாவின் பாரம்பரிய பண்பாட்டு மண்ணில் தோன்றி, வளர்ந்து, பக்குவமடைந்துள்ளன. கி. மு 2வது நூற்றாண்டு முதல் கி.பி 19வது நூற்றாண்டு வரை, வெளிநாடுகளுக்குத் திறக்கப்படாத, சுயேச்சையான தொகுதி உருவாயிற்று. அவை, அழகியல் மதிப்பையும் கைவினைத் தரத்தையும் ஆழ்ந்த சமூகத் தாக்கத்தையும் கொண்டவை. சீனாவின் பண்டைக்காலக் கட்டிடக் கலை, உலகில் மிகவும் நீண்டகாலமாகவும், மிக பரந்த பிரதேசங்களில் பரந்துகிடக்கும் தனிச்சிறப்பு பாணியுடைய கலைத் தொகுதியாகும். இது, ஜப்பான், வட கொரியா, வியட்நாம் ஆகியவற்றின் பண்டைக்கால கட்டிடங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில், கட்டப்பட்ட ஐரோப்பிய கட்டிடங்களிலும் இதன் தாக்கம் தெரிந்தது.

சீனாவின் நிலப்பரப்பு விசாலமானது, தேசிய இனங்கள் அதிகம். பண்டைக்கால சீன மக்கள் வேறுபட்ட இயற்கை மற்றும் புவியியல் நிலைமைக்கேற்ப, வேறுபட்ட கட்டமைப்பும் வித்தியாசமான கலைப் பாணியும் கொண்ட பண்டைகாலக் கட்டிடங்களை உருவாக்கினர். வட சீனாவின் மஞ்சள் ஆற்றுப் பள்ளதாக்கில், குளிர்காற்றையும் உறைபனியையும் தடுக்கும் வகையில், பண்டைக்கால சீன மக்கள் மரம், மஞ்சள் மண் ஆகியவற்றால் வீடுகளை கட்டினர். ஆனால் தென் சீனாவில், கட்டிடப் பொருட்களில், மூங்கில், கோரைப்புல் ஆகியவையும் இடம்பெறுகின்றன. சில இடங்களில் ஈரத்தை தவிர்க்கவும் காற்றோட்டத்தை அதிகரிக்கவும் வீடுகளின் கீழ் பகுதி வேலி மாதிரியாக கட்டப்படுகின்றது.

சீனாவின் பண்டைக் கால கட்டிடங்கள் மூன்று காலகட்டங்களில் வளர்ச்சியடைந்துள்ளன. ச்சின் மற்றும் ஹான் வம்ச ஆட்சிக் காலம், சுய் மற்றும் தாங் வம்ச ஆட்சிக் காலம், மிங் மற்றும் ச்சிங் வம்ச ஆட்சிக்காலம் ஆகியவை இந்த மூன்று காலகட்டங்களாகும். மூன்று காலகட்டங்களும் அதனதன் ஏராளமான பிரதிநிதித்துவ கட்டிடங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அரசு மாளிகை, கல்லறை, நகரம், பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பு திட்டப் பணிகள் முதலியன் காணப்படுகின்றன. அத்துடன் கட்டிடங்களின் வடிவம், மூலப்பொருள் முதலிய துறைகளில் பிற்கால கட்டிடக் கலைத் தொழிலுக்கும் உதவின.

ஆனால், நீண்டகாலமாக, போரின் போது கொளுத்தப்படுவதன் காரணமாக, சில நீண்ட வரலாறுடைய பண்டைக்கால கட்டிடங்கள் சீனத் தேசத்தின் நிலப் பகுதியில் அழிந்துவிட்டன. தற்போது இன்னும் பார்வையிடக் கூடிய சீனாவின் பண்டைக்கால கட்டிடங்கள் பெரும்பாலானவை தாங் வம்ச ஆட்சிக்காலத்துக்குப் பின், அதாவது கி. பி 7வது நூற்றாண்டில் கட்டப்பட்டவை.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040